படங்கள்; பிள்ளை
பிச்சைக்காரன்: கையும் காலம் நல்லாத்தானே இருக்கு. பிச்சைப் போடாமல் போறியே…?
***************************************
“அமைச்சர்கள் எல்லாம் பதவியை ராஜினாமா பண்ணுங்க…”
“ஏன்?”
“புதுசா கட்சி மாறி வர்றவங்களுக்குப் பதவி கொடுக்கணும்…”
***************************************
“ஏன் மூச்சு வாங்க ஓடி வர்றே…?”
“அவசரமா ஆக்சிஜன் சிலிண்டர் வேணும்.”
***************************************
“ஒரே இந்தியா; ஒரு பால் கார்டு திட்டமா?”
“ஆமாம்… பணம் கட்டிட்டா எங்கே வேணும்னாலும் பால் வாங்கிக்கலாம்.”
– எஸ். மோகன், கோவில்பட்டி
***************************************
“கோமு! போகும்போது என்னத்தைக் கொண்டு போகப் போகிறோம் என்று தத்துவம் பேசின உன் சிநேகிதி சித்ரா…”
“சித்ரா… என்ன பண்ணினா?”
“நீ கொடுத்த காபியைக் குடிச்சிட்டு, அந்தத் தம்ளரையும் கொண்டுபோயிட்டா!”
***************************************
“சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள் என்று ஏன் சொன்னாங்க?”
“சக்தி என்றால் மனைவி! இப்போது நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.”
– கு. அருணாசலம், தென்காசி.
நன்றி: கல்கி
பின்னூட்டமொன்றை இடுக