கார்க்கியின் பார்வையில்

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

சமீபத்தில் 1933 மார்ச் 6ம் தேதி ஹிட்லரின் நாஜி கட்சி தேர்தலில் 43.9 சதவீத வாக்குகள் பெற்று வென்றது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு
ரேய்ச்ஸ்டெக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டு அந்தப் பழி கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்தப்பட்டது. வெறியூட்டும் பேச்சுக்களால் மக்களை
சுயநினைவற்றவர்களாக மாற்றி நாஜிக் கட்சி இந்த வெற்றியை அடைந்தது. நாஜிக்கள் அதிகாரத்தில் இருந்த பன்னிரண்டு ஆண்டுகளும்
அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மக்களிடையே கம்யூனிசத்தின் மேலான
அச்சத்தை பூதாகரமாக ஊதிப் பருக்க வைத்திருந்தனர்.

நாஜிக்கள் மக்களிடையே அச்சத்தின் அரசியலை நடத்தி அதன் மூலம் அவர்களிடையே கண்மூடித்தனமான வெறியை ஏற்றி அதன் மூலமே
தமக்கான ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். கோயபல்ஸ் போன்ற தேர்ந்த பொய்யர்கள் மிகத் திறம்பட பொய்ப்பிரச்சாரத்தின்
மூலம் மக்களை ஆடுமாடுகள் போல தமக்குப் பின் அணி திரள வைத்தனர். ஆரிய இனத் தூய்மை, யூத இன எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு
போன்ற மக்கள் விரோத தளத்தின் மேலேயே நாஜிக்களின் சித்தாந்தங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக இது போன்ற பாஸிஸ்டுகள் ஒரு நார்ஸிஸ்டைப் போல தம்மையே ரசித்துக் கொள்ளும் மனநோய் கொண்டவர்கள். ஆங்கிலத்தில்
பர்சனாலிடி கல்ட் என்பார்கள்; அதாவது தங்கள் தலைமையை ஈடுஇனையற்றது, கடவுளுக்கும் மேலானது, என்பது போல் ஊதிப்பெறுக்கி
காட்டுவதில் வல்லவர்கள் ( larger than life image). தமது குறுகிய வெற்றியை நிலையானது என்று நம்பும் மனநோயாளிகள் இவர்கள். கும்பல்
சார் நீதியே இவர்கள் நம்பும் நீதியாகும். இது போன்ற பாஸிஸ்டுகளின் வீழ்ச்சியானது எந்தளவுக்கு கொடுரமாக இருக்கும் என்பது ஹிட்லரின்
வீழ்ச்சியே நமக்குக் காட்டுகிறது.

பாஸிஸ்டுகள் தமது அரசியல் எதிரிகளை தேசத்துக்கே எதிரிகள் என்பது போல உருவகப்படுத்தி தேசிய வெறியை தூண்டி விடுவதை ஒரு முக்கியமான
தந்திரமாகக் கொண்டிருப்பார்கள். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஜெர்மானியின் விரோதிகள் என்பது போல சித்தரிப்பதில் ஹிட்லர் குறுகிய கால
வெற்றியை பெற்றிருந்தான்.

நாஜிக்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத் தான் ஒரு மயிரளவும் பிசகாமல் பின்பற்றுகிறது இங்கேயுள்ள இந்துத்துவ பார்ப்பனிய பாஸிஸ்ட்
கும்பல். இதில் அவர்களுக்கு அவ்வப்போது வெற்றியும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் வரலாற்றில் பாஸிஸத்துக்கு ஏற்பட்ட கதியை;
அதற்கு ஏற்பட்ட முடிவை இவர்கள் சந்திக்கப்போகும் நாள் விரைவில் வந்தே தீரும். அன்று ஹிட்லரின் முதுகெலும்பை முறித்து அவனது
சித்தாந்தத்தை மரணக் குழிக்குள் அனுப்பியவரின் சீடர்கள் இந்திய ஹிட்லராக உருவெடுத்து வரும் மோடிக்கான மரணக்குழியை தோண்டுவார்கள்.

குஜராத் தேர்தல் நமக்கு நிறைய பாடங்களை போதிக்கிறது. ஹிட்லருக்கு எதிரி யூதர்களும் கம்யூனிஸ்டுகளும்; மோடி தனக்கு எதிரிகளாக
இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் முன்னிருத்துகிறான். ஹிட்லர் எப்படி தனது அரசியல் எதிரிகளை ஜெர்மானியின் எதிரிகளாகவே
சித்தரித்தானோ அதே போல் மோடியும் இஸ்லாமியர்களை இந்தியாவின் எதிரிகளாக சித்தரிக்கிறான். தேர்தல் மேடைகளில் முஷாரஃபை நோக்கி
வாய்சவடால்களை வீசி இங்குள்ள முஸ்லிம்களும் முஷாரஃபும் ஒன்று தான் என்பதாக பெரும்பான்மை “இந்துக்கள்” மனதில் பதிய வைக்கிறான்.
நாஜிக்கள் நடத்திய அதே அரசியல் தான் மோடியினதும் – அச்சத்தின் அரசியல்!!

ஹிட்லரைப் போலவே மோடியின் அடிப்பொடிகள் இவனை ஒரு பிதாமகனாக சித்தரிக்கிறார்கள். தேர்தல் கூட்டமெங்கும் மோடி கவர்ச்சியாக
சிரிப்பது போன்ற முகமூடிகளை தொண்டர்கள் அணிந்து வலம் வருகிறார்கள். ஹிட்லரிடம் ஒரு கோயபல்ஸ் தான் இருந்தான் ஆனால் மோடியைச்
சுற்றி இருப்பவர்களெல்லாம் கோயபல்ஸையும் விஞ்சும் வாய் வீரர்களாய் இருக்கிறார்கள். தெகல்காவினால் பச்சையாக அம்பலப்பட்ட பின்னும்
எந்த வித வெட்கமோ கூச்சமோ இன்றி அந்தக் கொலைகளை தொலைக்காட்சி காமெராக்கள் முன்னே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரேய்ச்ஸ்டெக் கட்டிட எரிப்பின் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்திய ஹிட்லரைப்போலவே கோத்ரா ரயில் எரிப்பை முஸ்லிம்களை கொடூரமானவர்களாக காட்ட மோடி பயன்படுத்திக் கொண்டான். அந்த சம்பவங்களுக்குப் பின் ஹிட்லரைப் போலவே மிகத் தெளிவாக திட்டமிட்டு ஒரு இஸ்லாமிய இனவொழிப்பை நடத்திக் காட்டினான் மோடி.  கொலைகளை ஜெர்மானிய பெருமை  – ஆரியப் பெருமை என்னும் போர்வைக்குள் ஒளித்த ஹிட்லரைப் போலவே மோடியும் குஜராத்தி அஸ்மிதாவுக்குள் ஒளிக்கிறான். குஜராத்தி அஸ்மிதா என்னும் ஒளிவட்டத்துக்குள் சோராபுத்தின் சேக் போன்ற அப்பாவி முஸ்லிம் விட்டில்களின் ஆவிகள் ஏராளமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது.

மோடிக்கு எதிராய் குஜராத்தில் “அரசியல்” செய்யும் காங்கிரஸோ ஓனாயின் முன்னே நிற்கும் புடுக்கறுந்த சொறிநாய் போல கூனிக்குறுகி
நிற்கிறது. மோடியின் அராஜக அரசியலைப் பற்றி முனகும் அளவுக்குக் கூட தெம்பில்லாமல் குரல்வளை அறுந்த பன்றியைப் போல தேம்பிக் கொண்டிருக்கிறது
காங்கிரஸ். ஒருவேளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தால் கூட அது இந்துத்துவத்தின் தோல்வியாய் இருந்திருக்காது. இது பற்றி
முன்பு கார்க்கி பக்கங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் நாம் எழுதிய கட்டுரை – https://kaargipages.wordpress.com/2007/12/12/%e0%ae%95%e0%af%
81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-
%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

ஆனால் வரலாறு ஹிட்லர்களை எப்படி சந்தித்தது என்பது நம் முன் ஒரு பாடமாக இன்றும் நிற்கிறது. அன்று செம்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு
தற்கொலை செய்து கொண்ட ஹிட்லரும் மரணக் குழிக்குள் நாஜிக்கள் அமிழ்த்தப்பட்ட சம்பவங்களும் நமக்கு நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது.
இங்கும் பார்ப்பன பாஸிஸத்தை முறியடிக்கப்போகிறவர்கள் தோழர் ஸ்டாலினின் சீடர்களான கம்யூனிஸ புரட்சியாளர்கள் தாம்; நக்சல்பாரி அரசியலே
இந்துத்துவ கொடூரத்திற்கான சரியான தீர்ப்பை வரலாற்றில் எழுதப்போகிறது.

அது வரையில் மோடியின் வெற்றியென்னும் சிற்றின்பத்தால் இங்கே தமிழ் வலைத்தளங்களில் துடிக்கும் பூனூல்களுக்கு சொல்லிக் கொள்வது – அடங்குங்கடா…
We are coming!!

திசெம்பர் 24, 2007 - Posted by | facist, politics

2 பின்னூட்டங்கள் »

  1. I cannot type in tamil- I am in Tirupur- Coimbatore Dist-

    very excellant message in the historical events- indraiya thavai pan mugam konda vilippunarvu- nichayam niraiverum-

    பின்னூட்டம் by JOSEPH | ஜனவரி 24, 2008 | மறுமொழி

  2. அன்றைய நாசிச ஜெர்மனியையும், இன்றைய இந்துத்துவா இந்தியாவையும் மிகச்சரியாக ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.

    -Kalaiyarasan

    பின்னூட்டம் by Kalaiyarasan | செப்ரெம்பர் 28, 2008 | மறுமொழி


பின்னூட்டமொன்றை இடுக