தமிழ்ச் சொல்லா ? பள்ளிக்கூடம், பள்ளிவாசல், பள்ளி அறை , மடப்பள்ளி (Post No.10,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,819

Date uploaded in London – –    7  APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பள்ளி என்ற சொல் திருச்சினாப் பள்ளியில் மட்டும் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. கர்நாடகத்தில் ஹல்லி என்று முடியும் நூற்றுக்கணக்கான ஊர்ப் பெயர்களிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. தொல்காப்பியம் முதல் பள்ளன்கோவில் செப்பேடுவரையுள்ள இந்தச் சொல் தமிழ்ச் சொல்லா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

Sanskrit dictionary

https://www.wisdomlib.org/definition/palli

Palli (पल्लि) or Pallī (पल्ली).—f.

1) A small village; पल्लीघोषान् समृद्धांश्च बहुगोकुलसंकुलान् (pallīghoān samddhāśca bahugokulasakulān) (apaśyat) Mb.12.325.2; also a settlement of wild tribes.

2) A hut.

3) A house, station.

4) A city or town (at the end of names of towns); as त्रिशिर- पल्ली (triśira- pallī) (Trichinopoly).

5) A house-lizard.

6) A creeping-plant.

Derivable forms: palli (पल्लिः).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—f.

(-lli) 1. A small village. 2. Any village. 3. A house. 4. A number of houses. 5. Any place or station. 6. A house-lizard: see palla.

Palli can also be spelled as Pallī (पल्ली).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—[feminine] a small village, [especially] a settlement of wild tribes.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Pallī (पल्ली):—[from palla > pall] a f. See below.

2) Palli (पल्लि):—[from pall] a f. a small village, ([especially]) a settlement of wild tribes, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) [v.s. …] a hut, house, [ib.]

4) Pallī (पल्ली):—[from pall] b f. a small village etc. (= palli), [Kathāsaritsāgara]

5) [v.s. …] a hut, house, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

6) [v.s. …] a city ([especially] ifc., in Name of towns e.g. triśira-p, = Trichinopoly)

7) [v.s. …] a [particular] measure of grain, [Kātyāyana-śrauta-sūtra [Scholiast or Commentator]]

8) [v.s. …] a small house-lizard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

9) Palli (पल्लि):—b pallī See under √pall.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Palli (पल्लि):—(lli) 2. f. A small village; a house; a place; a house lizard.

Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)

Palli (पल्लि) in the Sanskrit language is related to the Prakrit word: Palli.

தமிழில் ‘ப’ என்றால் கன்னடத்தில் ‘ஹ’. நாம் பத்து என்றால் கன்னடக் காரர்கள் ‘ஹ’.த்து என்பர். சுவரில் ஓடும் பல்லியும் சரி, மாணவர் செல்லும் பள்ளியும் சரி கர்நாடகத்தில் ஹல்லி -தான்.

திருச்சி நகர வரலாற்றைப் படிப்போர் பள்ளி என்ற சொல், சமணர் தொடர்பினால் வந்தது என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிம்மவர்மனின் பள்ளன்கோவில் செப்பேடுகள் (Pallankoil Copper Plates of Simhavarman) அந்தப் பல்லவ மன்னன்,  வஜ்ராநந்திக் குரவர்க்கு பள்ளிச்சந்தமாக (கி.பி.550) இடம் கொடுத்ததாக செப்புகிறது. பள்ளிச் சந்தம் என்பது சமண, பவுத்த மதத்தினருக்கு மன்னர்கள் அளிக்கும் ஊர் ஆகும்.

பிராமணர்களுக்கு நிலம் கொடுத்தால் அது பிரம்மதேயம் ; மங்கலம் என்று ஊர்ப்பெயர்கள் முடியும்; கோவில்களுக்குக் கொடுத்தால் அது தேவதானம். இவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள். அப்படியானால் பள்ளிச் சந்தமும் ஸம்ஸ்க்ருதம்தானே !! மேலும் தமிழில் ‘ச’ சொற்கள் வரக்கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் தமிழ்ச் சொற்களிலும் ‘ச’ – சொற்கள். கை  விரல்களில்  எண்ணும் அளவுதான். அவையும் ஸம்ஸ்க்ருதச்  சொற்கள்

தொல்காப்பியத்தில் 1-100, 1-102ல் ‘பள்ளி’ வருகிறது. சங்க இலக்கிய நூல்களிலும் ‘பள்ளி’ வருகிறது. ஆயினும் பிற்காலத்தில் இதை ஏன் முஸ்லீம்களுக்கும் சமண, பவுத்த மதத்தினருக்கும் பயன்படுத்தினர் என்பது விளங்கவில்லை.

xxx

முதலில் சில, பல சொற்களைக் காண்போம்

பள்ளி வாசல் – முஸ்லீம்கள் தொழும் இடம் MOSUE

பள்ளி ச்சந்தம் – சமண, பவுத்தர்களுக்கு தானம் செய்யப்பட்ட ஊர் GIFT TO JAINS AND BUDDHISTS

பள்ளி – இடம் (தொல்காப்பிய முதல் அதிகாரம்) PLACE

பள்ளிக்கூடம் – SCHOOL ஸ்கூல்; இன்றும் இலங்கைத் தமிழர்கள், லண்டனில் கூட பாடசாலை என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைத்தான் பயன்படுத்துவர்.

பள்ளி அறை – BED ROOM பெட் ரூம், படுக்கை அறை .

மதுரை மீனாட்சி கோவில் பள்ளி அறை BED ROOM OF GODDESS MEENAKSHI IN MADURAI தீபாராதனையைக் காண நாங்கள் எல்லாம் எங்கள் தந்தையுடன் ஓட்டம் ஓட்டமாக ஓடிச் செல்லுவோம். தினமும் இரவு பத்துமணிக்கு சற்று முன்னால் , மீனாட்சி தேவியின் பெட் ரூமு BED ROOM க்கு திருவாளர் சொக்கநாதர் MR SOKKANATHAR  வருவார். சின்ன ‘டொமுக்கு டொமுக்கு’TOM TOM  கொட்டுடன் நாயனமும் இருக்கும்.

பள்ளி அறையை சுந்தரேசர் — தமிழில் சொக்கநாதர் — நெருங்கியவுடன். மீனாட்சி ‘பெட் ரூம்’ கதவைத் திறப்பதற்காக பெரிய அன்னன்ஸ்

மென்ட்ANNOUNCEMENT  / அறிவிப்பு வரும்

ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட , ராஜ கம்பீர, நாடாளு நாயக , பிரம்மாண்ட நாயக, அகிலாண்ட கோடீஸ்வர , சுந்தரேசர் பராக், பராக் ……………….

என்று சொன்னவுடன் பள்ளி அறை = BED ROOM பெட் ரூம் கதவுகள் திறக்கும். பின்னர் தீபாராதனை. அருமையான நறுமணம் கமழும் பாலும், ஆளுக்கு எண்ணி பத்து சுண்டலும் கையில் விழும். மறக்க முடியாத காட்சி.

பள்ளி அறைக்கு இவ்வளவு மரியாதை.

நாம் மனைவியின் பள்ளி அறைக்குள் செல்லும்போது கிடைக்கும் மரியாதையோ “பட்டுப் புடவை, தங்க நெக்லஸ், வைர அட்டிகையை”ப் பொறுத்தது !!!!!

XXXX

மடைப்பள்ளி /மடப்பள்ளி – கோவில் சமையல் அறை

பள்ளிக்கட்டு – ஐயப்ப பக்த்தர்களின் இரு முடி

பள்ளிப் படை – ஈமக்கடன் , ஞாபகார்த்தக் கோவில்

பள்ளியோடம் – படகு வகை

XXX

ஆனந்த விகடன் அகராதி மேலும் பல பொருள் தருகிறது —

அறை , ஒரு ஊர், ஒரு சாதி , நித்திரை, கல்லூரி, பட்பெண் ,

மருத நிலத்தூர், அரண்மனை, தூக்கம், சாலை, விலங்கு தூங்குமிடம் (DEN, CAVE, ROCK SHELTER,,

வன்னிய சாதி, பள்ளத்தி, குறும்பர், இடைச் சேரி , முனிவர் வாசம் , தேவர் கோவில் , பள்ளிக்கூடம்

XXX

1943-44-ம் ஆண்டுகளில் ஆங்கில மொழியில் தமிழ் சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய டாக்டர் ஆர்.பி சேதுப்பிள்ளை DR R P SETHUPILLAI மேலும் பல தகவல்களைத் தருகிறார்.

நாஞ்சில் நாடு எனப்படும் தென் திருவாங்கூரில் கிறிஸ்தவ சர்ச்சுக்கும் பள்ளி என்று பெயர் சூட்டப்பட்டதைக் காட்டுகிறார்.- சவுரியார் கோயில் பள்ளி

சிலப்பதிகாரத்தில் , அறவோர் பள்ளி என்ற வரி இந்திர விழா எடுத்த காதையில் வருகிறது இதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அருகர் பள்ளி, புத்தர் பள்ளி என்று குறிப்பிடுகிறார்.

முதலில் சமண, பவுத்த முனிவர்கள் வசிப்பிடமாக இருந்து பின்னர் அவர்கள் கொள்கைகளைப் போதிக்கும் இடமாக மாறியதால் , கவ்வி கற்கும் இடங்களுக்கு பள்ளிக்கூடம் SCHOLL, COLLEGE என்று பெயர் வந்ததாக சேதுப்பிள்ளை சொல்கிறார்.

XXX

என் கருத்து

சமண மதம் பரவாத இலங்கையில் இந்துப் பள்ளிகளை இலங்கைத் தமிழர்கள்  இன்றும் பாடசாலை என்று அழைக்கும்போது இது சரி என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் இன்று பாடஸாலை என்பதை வேதம் கற்கும் இடத்தோடு மட்டும் பயன்படுத்துகிறோம்.

டாக்டர் சேதுப்பிள்ளை,  ‘மாதவர் பள்ளி, ஆசீவகர் பள்ளி, திண்ணைப் பள்ளிக் கூடம்’ என்ற சொற்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்

XXX

சம்ஸ்க்ருதத்தில் பள்ளி

சம்ஸ்க்ருத மொழியில் 16 பொருள்கள் உள்ளதாக விஸ்டம் லைப்ரரி WISDOM LIBRARY இணையதளம்/ வலைத்தளம் சொல்கிறது. அதைப் பார்க்கையில் பள்ளி என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றே தோன்றுகிறது. தொல்காப்பியரை சமண முனிவராகவும், சபரிமலை அய்யப்பனை ஒரிஜினல் புத்தர்- சமணர் கோவில் என்று வாதிப்போருக்கும் பள்ளி, பள்ளிக்கட்டு சொற்கள் பயன்படுகின்றன .

தொல்காப்பியரை பழந்தமிழர் என்று நம்பினால் அதற்குப் பின்னர் எழுந்த சங்க இலக்கியத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதையும் காண்போம் முதலில் விஸ்டம் லைப்ரரி https://www.wisdomlib.org/definition/palli கொடுக்கும் சொற்கள் இதோ —

Sanskrit dictionary

https://www.wisdomlib.org/definition/palli

Palli (पल्लि) or Pallī (पल्ली).—f.

1) A small village; पल्लीघोषान् समृद्धांश्च बहुगोकुलसंकुलान् (pallīghoān samddhāśca bahugokulasakulān) (apaśyat) Mb.12.325.2; also a settlement of wild tribes.

2) A hut.

3) A house, station.

4) A city or town (at the end of names of towns); as त्रिशिर- पल्ली (triśira- pallī) (Trichinopoly).

5) A house-lizard.

6) A creeping-plant.

Derivable forms: palli (पल्लिः).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—f.

(-lli) 1. A small village. 2. Any village. 3. A house. 4. A number of houses. 5. Any place or station. 6. A house-lizard: see palla.

Palli can also be spelled as Pallī (पल्ली).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—[feminine] a small village, [especially] a settlement of wild tribes.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Pallī (पल्ली):—[from palla > pall] a f. See below.

2) Palli (पल्लि):—[from pall] a f. a small village, ([especially]) a settlement of wild tribes, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) [v.s. …] a hut, house, [ib.]

4) Pallī (पल्ली):—[from pall] b f. a small village etc. (= palli), [Kathāsaritsāgara]

5) [v.s. …] a hut, house, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

6) [v.s. …] a city ([especially] ifc., in Name of towns e.g. triśira-p, = Trichinopoly)

7) [v.s. …] a [particular] measure of grain, [Kātyāyana-śrauta-sūtra [Scholiast or Commentator]]

8) [v.s. …] a small house-lizard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

9) Palli (पल्लि):—b pallī See under √pall.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Palli (पल्लि):—(lli) 2. f. A small village; a house; a place; a house lizard.

Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)

Palli (पल्लि) in the Sanskrit language is related to the Prakrit word: Palli.

TO BE CONTINUED………………………………………………

பள்ளிவாசல் , பள்ளிக்கூடம், பள்ளி அறை , மடப்பள்ளி, ஹள்ளி , பள்ளி

Leave a comment

Leave a comment