போஜ மன்னன் ரசித்த ஒரு காதல் கவிதை! (Post No.7948)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7948

Date uploaded in London – – – 10 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

சம்ஸ்கிருதத்தில் பல்லாயிரக்கணக்கான காதல் கவிதைகள் உள்ளன. அவற்றை ரசிக்காதோர் இல்லை – (சம்ஸ்கிருதத்தின் பால் வெறுப்பில்லாதவர்கள் நிச்சயம் படித்து அல்லது கேட்டு ரசித்திருப்பர்)

இந்தக் காதல் கவிதைகளின் தொகுப்புகள் பலவும் பல்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்டு வேறு இருக்கின்றன.

போஜ மன்னன் தான் எழுதிய சரஸ்வதி கண்டாபரணம் நூலில் சிறந்த பாடல்களை எடுத்துக் காட்டாகக் காட்டுவது வழக்கம்.

உக்தி என்ற கவிதை இலக்கணத்தை விளக்க வந்த போஜ ராஜன் அருமையான கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாக காட்டுகிறான்.

கவிதை இது தான் :

குஷலம் தஸ்யா ஜீவதி

  குஷலம் ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் |

புனரபி ததேவ கதயஸி

  ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி ||

குஷலம் – அவள் நன்றாக இருக்கிறாளா?  (Is she well and cheerful?)

தஸ்யா ஜீவதி – அவள் உயிரோடு இருக்கிறாள்! (She lives)

குஷலம் – நான் கேட்டது அவள் நன்றாக இருக்கிறாளா என்று! (“I ask you, “is she well?”)

ப்ருஷ்டாஸி  ஜீவதீத்யுக்தம் –  நான் பதில் சொன்னேன் – அவள் உயிரோடு இருக்கிறாள் என்று (I have replied , “She lives”)

புனரபி ததேவ கதயஸி –  நீ சொன்னதையே திருப்பிச் சொல்கிறாய்! (You are saying again the same thing)

ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி – அவள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் போது அவளை இறந்து விட்டாள் என்று சொல்லச் சொல்கிறாயா?

(“Am I to say she is dead when she still breathes?”)

(English Translation : A.A.R)

ஆர்யா சந்தத்தில் அமைந்துள்ள இது காலத்தை வென்ற ஒரு காதல் கவிதை.

தோழியிடம் அவன் காதலியைப் பற்றி தலைவன் ஆவலுடன் நலம் விசாரிக்கிறான்.

தோழியோ அவள் மூச்சு மட்டும் நிற்கவில்லை – உன்னைப் பிரிந்து என்பதை அழுத்தம் திருத்தமாக, “தஸ்யா ஜீவதி” என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறாள்.

அவளுடைய எல்லா நலன்களும் அழிந்தொழிந்தன; நடைப்பிணமாக இருக்கிறாள் (கோமா ஸ்டேஜிலோ?!) – மூச்சு மட்டும் ஓடுகிறது என்று இப்படிச் சிறப்பாகச் சொல்வது காவிய சொற்குணங்களில் உக்தி என்ற பெயரை அடையும்.

இப்படி 24 சொற்குணங்கள் உள்ளன. 23ஆவதாக அமைவது உக்தி. எப்படிப்பட்ட மஹா ரஸிகனாக இருந்திருந்தால் போஜன் தான் இதை ரஸித்ததோடு காலம் காலமாக உலக மக்கள் அனைவரும் ரஸிக்கத் தக்க ஒரு உதாரணக் கவிதையாகக் காட்டி இருப்பான்?!

கவிதா ரஸிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் போஜ மஹாராஜனின் சரஸ்வதி கண்டாபரணம்!

tags — போஜ மன்னன் , காதல், கவிதை

Leave a comment

Leave a comment