Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

Muslims Helping the Chennai Flood Victims, Cleaning the debris, and response to its critics (தமிழ் & English)

leave a comment »

Jan 2016 Update: KCGC-யின் வெள்ள நிவாரண மறுவாழ்வு திட்ட மூன்றாம் பருவ நிதியளிப்பில் ரூ 5,97,700 பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது!

ஏற்கனவே இவ்வமைப்பின் சார்பாக மூன்று தவனைகளில் சுமார் முப்பது லட்சக்கணக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் தேவையின் அடிப்படையில் இன்னும் தொடரலாம்.


 

I have collected a few photos & links of rescue & relief efforts of individual Muslims, families, kids & their organisations (PFI, TMMK, SDPI, TNTJ, INTJ, etc)  in the Dec 2015 flooding of Chennai & Cuddalore. This is just a tip of the iceberg. If you have visited any Chennai Mosque or Islamic Centres (including Hajj Committee) in the Dec 2nd week, you would see relief materials worth several thousands (or, lakhs) in each place.

Chennai Relief Muslims and Others

 

 

 

 

 

 

 

 

 

 

குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்நாள்வரை பொதுச் சமூகம் யாரை அதிகம் வெறுப்புணர்வோடும் கசப்புணர்வோடும் பார்த்துக் கடந்ததோ, ஒரு வீட்டை வாடகைக்குவிட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடிஓடி உதவுவதில் முன்னி லையில் நிற்கிறார்கள்.(தி தமிழ் இந்து December 6 by சமஸ்)

 

Reporters of News 7 Channel discussing their experience during rescue and relief (Tamil)

 

 

உண்மையான இளைய தமிழகம்! ஜூனியர் விகடன் – 16 Dec, 2015

…மலைபோல குவிந்துள்ள குப்பைகளையும், சகதிகளையும் அவர்களால் மட்டுமே அகற்றிவிட முடியாத நிலையில் சில அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் தூய்மைப் பணியைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் பிரிவு, தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பலரும் சென்னை நகரை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்கள். ‘தூய்மை இந்தியா’ திட்டம் என்பது, உண்மையில் இதுதான்.

Jamat-e-Islami Cleaning up ChennaiFloods

TMMK, TNTJ, PFI, SIO cleaning up #ChennaiFloods

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113519

 

கோவிலை சுத்தம் செய்து, பிணங்களைத் தூக்கி, தெருவைப் பெருக்கி… சபாஷ் தவ்ஹீத் ஜமாத், தமுமுக!

சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்ட முதல் நாளிலிருந்தே மக்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். அந்த அமைப்பின் 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் களத்தில் குதித்துள்ளனர்….

TMMK & TNTJ carrying the dead bodies of Non-Muslims during Chennai Floods (Junior Vikatan)

 

 

தமுமுக வினருக்கு சூளைமேடு பகுதியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோணி அம்மாள் இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. உடனடியாக விரைந்த தமுமுகவினர் பாட்டியின் உடலை சுமந்து சென்றனர். பின்னர் வீட்டிலிருந்து அடக்க ஸ்தலத்திற்கும் சவப்பெட்டியில் வைத்து கழுத்தளவு நீரில் நடந்து சென்று அடக்கம் செய்ய உதவினர்….

 

பள்ளிவாசல்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்து என சகலமும் செய்து தந்துள்ளனர் இஸ்லாமியர்கள். வேளச்சேரி பள்ளிவாசலில் தங்கியிருந்த மக்களை தொந்தரவு செய்யாமல் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை, சாலையில் வைத்து நடத்தியுள்ளனர்.
http://tamil.oneindia.com/news/tamilnadu/tntj-tmmk-done-marvelous-job-flood-hit-chennai-241786.html

மழையில் பொங்கிய மனிதநேயம்! ஜூனியர் விகடன் – 13 Dec, 2015

லாரியில் காப்பற்றப்பட்ட கர்ப்பிணிகள்!

வெள்ளத்தில் சராசரி மனிதர்களே சிக்கியபோது இன்னொரு உயிரை சுமந்துகொண்டிருந்த கர்ப்பிணிகளின் நிலையைச் சொல்லவா வேண்டும். அப்படி வெள்ளத்தில் சிக்கிய நான்கு கர்ப்பிணிப் பெண்களை மீட்டனர் த.மு.மு.க-வினர். “வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மூன்றாவது பிளாக் பகுதியில் தண்ணீர் கீழ்தளம் முழுவதும் மூழ்கிவிட்டது. வீட்டில் மேல்தளத்தில் நிறைமாதக் கர்ப்பிணி ஒருவருக்கு வலி ஏற்பட 108-க்கு போன் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்தத் தெருவுக்கு ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. தகவல் அறிந்து அங்கே போன த.மு.மு.க-வினர் ஏணி மூலம் முதல் மாடிக்குப் போய் கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு லாரி ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள். இப்படி வெள்ளத்தில் சிக்கிய மூன்று கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார்கள். ‘‘வலியால் அவர்கள் துடித்து அழ.. தண்ணீர் வேகமெடுத்து ஓட அவர்களை மீட்டு லாரியில் ஏற்றியது சவாலான பணிதான்’’ என்கிறார் த.மு.மு.க நிர்வாகி ஜாஹிர் ஹுசைன்…..

ரோட்டில் நடைபெற்ற தொழுகை..!

மதங்கள் பார்க்காமல் பள்ளிவாசல்களில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். சென்னை மக்கா பள்ளி, மண்ணடி பள்ளி, தாம்பரம் பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடை, மாத்திரைகள் அங்கு வழங்கபட்டன…..

தவித்த கண்பார்வையற்றோர்!

சென்னை பெருவெள்ளத்தில் சாதாரண மனிதர்களே தத்தளித்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நிலையைச் சொல்ல வேண்டுமா? கோடம்பாக்கம் லிபர்டி அருகே ஆதிதிராவிடர் அரசினர் விடுதியில் வெள்ளம் சூழத் தொடங்கியது. அதில் தங்கி இருந்த கண்பார்வையற்ற மாணவர்கள் 11 பேருக்கு என்னவென்று நிலவரம் புரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள  இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மஸ்ஜித்துர் ரஹ்மான் மசூதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சிக்கியிருந்த இடத்துக்குச் சென்று பத்திரமாக மீட்கப்பட்டு மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்…

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113437

 

 

மழையின் நாயகர்கள்! ஆனந்த விகடன் – 16 Dec, 2015

ஊடகத் துறையில் பணிபுரிகிற, தருமபுரியைச் சேர்ந்த நியாஸ் அகமது இணையத்தில் தொடங்கி, களப்பணி வரை சுற்றிச் சுழன்றார். பேய் வெள்ளமும் பெரும் மழையுமாக சென்னைத் தத்தளிக்க ஆரம்பித்த முதல் நாள் இரவிலிருந்தே, இணையம் மூலம் அத்தனை உதவிகளையும் ஒருங்கிணைக்கத் தொடங்கினார். தர்மபுரியில் இருந்து நிவாரணப் பொருட்களைத் திரட்டிக் கொண்டு உடனடியாக சென்னைக்கு வந்தார்….

 

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலர் உடனடியாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பினர். போகிற வழியில், இந்த நிலையிலும் சுங்கவரி செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி களில் வற்புறுத்தப்பட, கொந்தளிப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதைக் கண்டித்துக் கோபம் கக்கினார்கள். அப்போது டெல்லியில் வசிக்கும் ஷாஜஹான், பிரதமர் அலுவலகத்துக்கு, ‘தமிழ்நாட்டில் உடனடியாக சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும்’ எனக் கடிதம் எழுதினார். இவரது முயற்சியால், ‘10 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சுங்க வரி வசூலிக்கக் கூடாது’ என உத்தரவிட்டது மத்திய அரசு.

 

இந்தப் பேரிடர் மீட்பில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  அமைப்பின் பணிகள் மகத்தானவை. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வந்து குவிந்த இந்த அமைப்பின் நண்பர்கள், இடைவிடாத மீட்புப் பணியிலும் உதவிகளிலும் இறங்கினார்கள். தொடர் பணியால் சில ஆயிரம் பேர்களை மீட்டெடுத்தவர்கள், உடனடியாக உணவு, மருந்து, பெண்களுக்கான நாப்கின்கள், மெழுகுவத்திகள் என அத்தியாவசிய உதவிகளை வழங்க ஆரம்பித்தனர். மீனவர்களின் படகுகளை மீட்புப் பணிகளுக்காக வாங்கிய அரசு அதிகாரிகள், அவற்றை ஆங்காங்கே விட்டுச் சென்றுவிட்டனர். தற்போது அவற்றை மீட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு செய்து வருகிறது.
….
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113480

ஐயப்ப பக்தர்களின் நெகிழ்ச்சி . கடலூர் மாவட்டம்.

மாற்று மதத்தினரின் மதநம்பிக்கையையும் மதிப்பளிக்கும் இஸ்லாமியர்கள். கோயில் ஒலிபெருக்கியில் தமுமுகவின் (MMK Party) சேவையை பாராட்டிய ஐயப்ப பக்தர்கள்.

 

Muslim group cleans flood-hit temples

In the last two days, they meticulously cleaned two temples, in Kotturpuram and Saidapet. “We find Hindus are unable to worship at temples in some areas because they have been severely affected owing to floods. So, we cleaned the mosques and temples and the streets badly damaged in the two areas. In the coming week, we will do similar work in other areas of the city,” Peer Mohammed, postgraduate in engineering and a student wing secretary (social service) of Jamat-E-Islami Hind, said. “Throughout the process, people there helped us and were very happy that the cleaning was done,” he added.

http://www.thehindu.com/news/cities/chennai/muslim-group-cleans-floodhit-temples/article7959652.ece

 

Hindu couple names their daughter ‘Yunus’ after a Muslim who saved them during Chennai floods

A Hindu couple in Chennai, Mohan and his pregnant wife Chitra were stranded at their residence in Chennai during the torrential rains and flood that crippled the city recently. Chitra was also having labour pains and Mohan did not know how to take his wife to the hospital considering his neighbourhood was neck deep in water. Mohamed Yunus happen to spot the helpless couple and took them aboard a boat he was in. Not only did Yunus take them to the hospital but he also tried to ease the tensed couple by talking to them through out their journey.

http://www.ibnlive.com/news/buzz/hindu-couple-names-their-daughter-yunus-after-a-muslim-who-saved-them-during-chennai-floods-1174838.html

 

Chitra and Mohan, hailing from Urapakkam which suffered one of the worst flooding in the city’s southern neighbourhood, named their daughter Yunus after the MBA graduate, who rescued the pregnant woman from neck-deep waters and moved her to a hospital.

The couple thanked Yunus by naming their daughter after him, with the businessman now promising to take care of his namesake’s educational expenses.

http://www.hindustantimes.com/india/hindu-parents-thank-muslim-saviour-by-naming-daughter-after-him/story-li8bjQPqCFCy8BPHu7fCfI.html

 

The Muslim Kids in action

 

MY STORY: I Lost Everything in the #ChennaiFloods but It Still Left Me with Gratitude

We were about to leave when a small boat carrying two elderly ladies passed us from the backyard. We called out for help. When we told them that we have a kid with us, they allowed us to get in.

The boat left us till the main road where an ambulance was ready to take people to a government school. All this was being done by an organization called TMMK. When we asked them where we should go, one of them offered us his own home.

When government boats decided to rescue only important people, a common man’s organization came forward to help the needy. Do you know what TMMK stands for? Tamil Nadu Muslim Munnetra Kazagham. They did not ask if we were Hindus or Muslims or Christians.

MY STORY: I Lost Everything in the #ChennaiFloods but It Still Left Me with Gratitude

 

தண்ணீரில் மிதந்து சென்று உணவு வழங்கிய தமுமுக, மமக‬ தொண்டர்கள் (Cuddalore)

TMMK Volunteers delivering rescue in Waist-deep water

TMMK Volunteers delivering rescue in Waist-deep water

08-12-2015 அன்று கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தாள் பாதிக்கபட்ட பகுதிகளில் ‪கடலூர் தெற்கு மாவட்டம், சிதம்பரம் மற்றும்‬ ‪‎புவனகிரி தமுமுக மமக‬ தொண்டர்கள் இணைந்து
‪‎சிதம்பரம், இந்திரா நகர்‬, ‪‎முள்ளிபள்ளம்‬, ‪‎கீழ்மணக்குடி‬, ‪‎மேலமணக்குடி‬
ஆகிய பகுதியில் 2000 பேருக்கு உணவு வழங்கினார்கள்

 

 

தவ்ஹீத் ஜமாஅத்தின் துப்புரவு பணி: புதியதலைமுறையின் 5 நிமிட சிறப்பு செய்தி

http://www.tntj.net/385359.html

சென்னை கோட்டூர்புரம், அனங்காபுத்தூர், வயலூரில் KCGC வெள்ள நிவாரணக் குழுவின் நிவாரணப் பொருட்கள் வினியோகம்! புளியந்தோப்பில், தமுமுகவினருடன் இணைந்து துப்புரவுப் பணி!!

TMMK Volunteer fumigating a Temple

KCGC, TMMK Volunteers clearing Debris

http://kayalpatnam.com/shownews.asp?id=16994

 

KCGC வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் நிவாரணப் பொருட்கள் வினியோகம்!

http://www.kayalpatnam.com/shownews.asp?id=16987

 

Response to people who criticize the publication of Muslims’ efforts in rescue and rehabilitation

This is from a FB post by a good friend.

…சென்னையில் இப்போதும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முழு சக்தியையும் திரட்டி முழுவீச்சில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

எந்த ஒரு காரியமும் சரியான திட்டமிடல் மூலமே சாத்தியமாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் தவ்ஹீத் ஜமாஅத். நிவாரணப் பணி திட்டமிடுதலை மிகச்சிறப்பாக அமைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிவாரணக் களம் துல்லியமாக திட்டமிடப்பட்டது.

 

முதலில் ஒரு பிரிவினர் தத்தளிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் ஒரு பிரிவினர் அவர்களுக்கு உணவு மற்றும் தேவைகளை செய்து தரவேண்டும். இது முதல் கட்டப்பணி. இரண்டாம் கட்டப் பணி ஒரு பிரிவினர் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும். ஒரு பிரிவினர் மருத்துவ சேவையை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடலே தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியை வெற்றிகரமாக அமைத்தது.

 

இதுபோல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி களப்பணியார்களை வகைப்படுத்தி முதல் 4 நாட்கள் தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று களமிறங்கிய வேறு அமைப்புகளையோ, கட்சிகளையோ, இயக்கங்களையோ இந்த வசைபாடும் வசவாளர்கள் காட்டமுடியுமா?

 

அடுத்து, எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் போட்டோவை போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் விளம்பரம் செய்து கொள்ளவில்லை, வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியாத மாதிரி இவர்கள் உதவினார்களாம். வலது கையே எதுவும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. முதல் கட்ட நிவாரணப் பணியில் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பலரை மீட்டதாக நாங்கள் சொல்லவில்லை அனைத்து பத்திரிகைகளும் படங்களோடு சொல்கின்றன. உதாரணம் சகோ.யூனுஸ் சம்பவம். அதேபோல இறந்து போன உடல்களை அவ்வளவு மோசமான வெள்ளத்தில் நீந்திச் சென்று மீட்டது யார்? தமுமுகவைச் சேர்ந்த சகோதரர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்களும் என்று நாங்கள் சொல்லவில்லை, இந்த வார ஜூனியர் விகடன் சொல்கின்றது, தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையதளம் சொல்கிறது, தினகரன் பத்திரிகை சொல்கிறது, பாலிமர் செய்திகள் சொல்கிறது, சத்தியம் செய்திகள், நியூஸ் 7 செய்திகள் சொல்கிறது.

 

முஸ்லிம்கள் போட்டோ போடுகிறார்கள், முஸ்லிம்கள் விளம்பரம் செய்து கொள்கிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் பிரிவினைவாதிகள் அதற்கு போட்டியாக நீங்களும் கழுத்தளவு வெள்ளத்தில் நீந்திச் சென்று மக்களை மீட்டது, இறந்து போன உடல்களை மீட்டது, தத்தளித்த மக்களுக்கு நீந்திச் சென்று உணவளித்தது, கர்ப்பினிப்பெண்களைக் காப்பாற்றியது போன்ற படங்கள் இருந்தால் நீங்களும் போடுங்களேன் நாங்களும் பார்க்கிறோம்? …

 

 

Short URL: http://wp.me/pmMJ0-pK

 

Written by S Ibrahim

2015-12-13 at 1:13 PM

Leave a comment