Sangathy
News

ஹரக் கட்டாவை பயங்கரவாத தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவு

Colombo (News 1st) ‘ஹரக் கட்டா’ எனும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தங்காலை பழைய சிறைச்சாலையின் பயங்கரவாத தடுப்பு பணியகத்தின் தடுப்பு முகாமில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 22 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

365 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையிலயே ஹரக் கட்டா எனும் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஹரக் கட்டா தப்பிச்செல்ல முயற்சித்தமை தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

Lincoln

Teaching appointments for 7342 National Education Diploma holders

Lincoln

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து மகாவலி வலயங்களுக்கு நீர்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy