Sangathy
News

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு – மூவர் உயிரிழப்பு

”யாழ். மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக யாழில் டெங்கு பரவல் அதிகரித்து வருகின்றது.

யாழ். மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன் , அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் தங்கள் உடல் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் தம்மை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்.

Related posts

US has biggest coronavirus testing programme in the world: Trump

Lincoln

Sri Lanka’s forest cover has not reduced to 16% – Conservator General of Forests

Lincoln

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy