Sangathy
News

1877 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

Colombo (News 1st) இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு தரங்களை சேர்ந்த  1877  சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ப்ரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது. 

”நாட்டைச் சூழவுள்ள தங்க அரண்” எனும் தொனிப்பொருளில்  Ceylon Royal Navy எனும் பெயரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி கடற்படை உருவாக்கப்பட்டது. 

1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பிற்கமைய, Ceylon Royal Navy எனும் பெயர் நீக்கப்பட்டு இலங்கை கடற்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

Related posts

பொலிஸ் காவலில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

John David

கார்த்திகைப் பூச்செடியின் கிழங்கை உண்ட யாழ். வாசி உயிரிழப்பு!

Lincoln

Poson celebrations at NDB with melodious Bhakthi Gee

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy