Sangathy
News

சட்டவிரோத துப்பாக்கிகள், கைக்குண்டுகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான அன்பளிப்பு தொகையை அதிகரிக்க

Colombo (News 1st) சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆலோசனைக் கோவை ஒன்றினூடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடயங்களை தௌிவுபடுத்தியுள்ளார்.

பொலிஸார் மற்றும் தனியார் உளவுப் பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று(25) முதல் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை கைப்பற்றப்படும் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் இந்த சன்மானம் வழங்கப்படவுள்ளது.

Related posts

Joint food security assessment by govt., FAO, WFP next month

Lincoln

Queen of the World Sri Lanka: Discovering fullest potential of Sri Lankan Women

Lincoln

7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து விசா கட்டணத்தை அறவிடாமலிருக்க அமைச்சரவை அனுமதி

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy