Sangathy
News

MiG கொடுக்கல் வாங்கல் வழக்கு: உதயங்க வீரதுங்க வெளிநாடு செல்ல அனுமதி

Colombo (News 1st) முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் MiG விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு உதயங்க வீரதுங்க மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை விமான படைக்கு உக்ரைனில் இருந்து MiG விமானங்களை கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்  உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

John David

Election monitor accuses govt. of doing its best to postpone polls

Lincoln

Another Cruise ship to Hambantota International Port next week

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy