Sangathy
News

சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Colombo (News 1st) சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்துடனான காலநிலை தொடரும் போது, ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மருந்துகளை உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலில் நீரின் அளவு குறையுமிடத்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமானதென  கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 2,10,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது

Related posts

Smokers, drinkers hit by index linked taxes

Lincoln

4 பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக கோபால் பாக்லே தெரிவிப்பு

Lincoln

ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy