Sangathy
News

பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

Colombo (News 1st) பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் சிந்தன கீதால் விதானகே வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இந்தியாவில் நடைபெறும் பொதுநலவாய சாம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டியில் ஆடவருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட சிந்தன கீதால் விதானகே வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Snatch முறையில் 128 கிலோ, Clean and Jerk முறையில் 162 கிலோ உள்ளடங்கலாக போட்டியில் அவர் 290 கிலோவை தூக்கினார்.

இதேவேளை, 73 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் இந்திக்க திசாநாயக்க வெண்கலப்பதக்கம் வென்றார்.

Snatch முறையில் அவர் 130 கிலோவையும் Clean and Jerk முறையில் 155 கிலோவையும் அவர் தூக்கினார்.  அதற்கமைய, இந்தப்போட்டியில் இந்திக்க திசாநாயக்க மொத்தமாக 285 கிலோவை தூக்கினார்.

இதேவேளை, இதற்கு இணையாக நடத்தப்படும் பொதுநலவாய கனிஷ்ட பளுதூக்கல் போட்டியில் இலங்கையின் மலீஷ கருணாரத்ன 73 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.  போட்டியில் அவர் மொத்தமாக 255 கிலோவை தூக்கினார்.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் கன மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Lincoln

Disappearance of cash from CBSL under probe

Lincoln

22 A: Amendments accepted at ‘committee stage’ should be subjected to SC approval

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy