Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இளமையில் தனிமை.. ஏக்கத்தின் உச்சத்தில் விபரீதம்.. விட்டு சென்ற தாய்.. கனகாவின் ரகசிய பக்கங்கள்..!

பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் நடிகை கனகா 1989-ஆம் ஆண்டு கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.


இந்தப் படத்தில் இவருக்கு இணையாக ராமராஜ் நடித்திருந்தார். யாருமே எதிர்பார்க்காத அளவு இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலில் மாபெரும் சாதனையை செய்தது.

நடிகை கனகா..

இந்த படத்தை அடுத்து நடிகை கனகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களோடு நடித்த இவர் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் டாப் நடிகையாக வெகு விரைவில் வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவை விட்டு எங்கு போனார் என்று சொல்ல முடியாத அளவு இவர் எங்கே என்று தெரியாமல் பலரும் திணறினார்.


இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை எடுத்து அது மீடியாக்களில் வெகுவாக பரவியது. இந்த சூழ்நிலையில் ஜெயந்தி கண்ணப்பன் கனகா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருப்பது இணையங்களில் வைரலாகி உள்ளது.

---- Advertisement ----

இளமையில் தனிமை..

கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆகி பிஸியான நடிகையாக மாறிய இவர் ஒரு கட்டத்தில் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

மேலும் நடிகை கனகா ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை.


மேலும் எதற்கும் வெளியே வருவதில்லை என்ற பல்வேறு பேச்சுக்கள் வெளி வந்தது. இதற்கு காரணம் அவரது அம்மா தேவிகாவின் மரணம் மற்றும் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வி என்ற கருத்துக்கள் கசிந்தது.

நடிகை கனகா யாரையும் சந்திக்காமல் இருப்பதாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கனகா குறித்து தனியார் youtube சேனலுக்கு பேட்டி எடுத்திருக்கிறார்.

ஏக்கத்தின் உச்சத்தில் விபரீதம்..

அந்தப் பேட்டியில் ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது எந்த நடிகையைப் பற்றியும் கண்ணதாசன் கட்டுரை எழுதியது இல்லை.

ஆனால் தேவிகாவை பற்றி கட்டுரை எழுதி இருக்கிறார். எப்போதுமே சிவாஜிகணேதனுக்கு ஏற்ற ஜோடி என்றால் அது தேவிகா தான் என பலரும் கூறியிருக்கிறார்கள்.


அந்த வகையில் தாய் தேவிகா மற்றும் மகள் கனகாவுக்கு இடையே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
கனகாவின் வாழ்க்கையில் நடந்த சோகம் என்னவென்றால் அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலேயே அப்பாவும், அம்மாவும் கனகாவுடன் இல்லை.

இதனால் பெரும்பாலான நேரங்களில் அவர் தனிமையில் தான் இருந்திருக்கிறார்.

குறிப்பாக கனகாவிற்கு அவரது அம்மா தேவிகாவின் இறப்பு நிலை குலையச் செய்ததோடு, தன்னை விட்டு விட்டு அம்மா இப்படி போவதை பார்த்து கனகா என்னை இப்படி விட்டு விட்டு தனியாக போகிறாயே எனக்கு யார் இருக்கிறார் என்று கூறிய வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என சொல்லி இருக்கிறார்.

கனகாவின் ரகசியங்கள்..

எனவே தனிமையில் இளமையை செலவிட்டு இருக்கக்கூடிய கொடுமையான அனுபவத்தை நடிகை கனகா பெற்றிருந்ததார். அவருக்கு ஏற்கனவே மன அழுத்தம் இருந்துள்ளது. இதனை அடுத்து தான் இவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார்.


அத்தோடு அவரை அவர் வீட்டில் சந்திக்க சென்ற போது வீட்டில் இருக்கும் ஜன்னல்கள் கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தது. இதை அடுத்து நாங்கள் இருக்கிறோம் என்று பேப்பரில் எழுதி எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என போன் நம்பரை எழுதி வைத்து வந்ததாக ஜெயந்தி கண்ணப்பன் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த சுனாமி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து கனகாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகம் உள்ளதா? என்று ரசிகர்கள் பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள்.

Continue Reading
Ads

More in Tamil Cinema News

Trending Now

To Top