Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

TV பாட்டு தானே என அதை கூட பண்ணல.. ஆனால்.. ரகசியம் உடைத்த மெட்டி ஒலி சாந்தி.,!

இன்று இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித் திரையில் நடிக்கும் நட்சத்திரங்களை விட சின்னத்திரையில் ஜொலிக்கும் நடிகைகளை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கும் அதிகளவு பிடித்துள்ளது. அந்த வரிசையில் மெட்டி ஒலி சாந்தி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


திரைப்படங்கள் என்றால் குறைந்தது இரண்டரை மணி முதல் 3 மணி நேரம் வரை தான் நாம் பார்ப்போம்.  ஆனால் சீரியல்கள் என்றால் அது ஒவ்வொரு நாளும், பல வருடங்கள் நீடித்து நம் வீட்டில் இருக்கும் ஒரு நபராகவே அதில் நடிக்கும் நடிகைகள் மாறிவிடுவார்கள். அந்த நிகழ்வில் லயித்து இருப்போம்.

மெட்டி ஒலி சாந்தி..

அந்த வகையில் என்றுமே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் மெட்டி ஒலி சாந்தி பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.
அது மட்டும் அல்லாமல் மெட்டிஒலி சீரியலை பற்றி பேசினால் இன்றும் ரசிகர்கள் அந்த கதையை மிக நேர்த்தியான முறையில் சொல்லக்கூடிய வகையில் இருப்பார்கள்.

அந்த அளவு ஒரு குடும்பத்தில் என்னென்ன நடக்குமோ அவற்றை அப்படியே சின்னத்திரையில் வெளிப்படுத்திய இந்த சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல் ஆக விளங்கியது.

அதிலும் இந்த சீரியலில் அம்மி அம்மி அம்மி மிதித்து என்று ஒளிபரப்பாகும் பாடலில் நடனமாடி பிரபலமானவர் தான் இந்த மெட்டிஒலி சாந்தி. இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய சிறையிலும் சில படங்களில் பாடங்களுக்காக நடனம் ஆடி இருக்கிறார்.

--Advertisement--


இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளி வந்த சூப்பர் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ஆட்டோக்காரன் படத்தில் குரூப் டான்ஸ் ஆடி இருக்கிறார்.

இதனை அடுத்து தான் சின்னத்திரையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லியாக நடித்திருக்கிறார்.

டிவி பாட்டு தானே..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருந்த இவர் மெட்டிஒலி சீரியலில் நடனம் ஆடுவதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் டிவிக்கு தானே பார்த்து கொள்ளலாம் என்று அசால்டாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இயக்குனர் தன் டான்ஸை பெரிதாக விரும்பியதாகவும் தான் அணிந்திருந்த உடையை அந்த பாடல் ஆட போதுமானது என்று சொன்னதாகவும் சொல்லிய இவர் பெரிய திரையில் விட சின்ன திரையில் அப்படி ஒன்றும் பெரிதாக இருக்காது என்று நினைத்தார்.

ஆனால் அந்த பாடல் மிகப்பெரிய ரீச்சை இவருக்கு பின்னாளில் பெற்றுக் கொடுத்ததை நினைத்து இன்று வரை மகிழ்ந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.


மேலும் தன் இயல்பான நடனத் திறமையை இந்த பாடல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உணரக்கூடிய வகையிலும் அவர்கள் ரசனைக்கு ஏற்ற விதத்திலும் அமைந்தது இன்று வரை மகிழ்ச்சியை தந்துள்ளது எனக் கூறியிருக்கிறார்.

வெளி வந்த ரகசியம்..

மேலும் ஆரம்பத்தில் இது குரூப் டான்ஸ் போல் இல்லாமல் மூன்று பேர் மட்டும் ஆடுவதாக இருந்ததாகவும், பின்பு தான் நீங்கள் பார்த்த நடன அமைப்பு சேர்க்கப்பட்டதாகவும் மெட்டிஒலி சாந்தி ஓபன் ஆக மெட்டிஒலி பாடல் ரகசியத்தை சொன்னது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


அத்தோடு சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்து அற்புதமான நடிப்புத் திறனை இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து நீண்ட நாட்களாக பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும் சன் டிவியில் நடிக்கவில்லை என்ற கவலை தற்போது நீங்கி விட்டதாக சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயம் ஆனது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் மெட்டிஒலி சாந்தி கூறிய ரகசியத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top