செய்திகள்

உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? 1

உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் என்று ஐக்கிய நாடுகள் பட்டியல்படுத்தியுள்ள 156 நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு பதினோராவது இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே டென்மார்க் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
2012 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுவரும் இந்த மகிழ்ச்சியான நாடுகள் என்ற பட்டியலுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பிலான அளவீடுகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் மற்றும் ஊழலற்ற அரசாட்சி போன்ற விடயங்கள் இவற்றில் சிலவாகும்.
இந்த பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்திலும் இந்தியா 140 ஆவது இடத்திலும் உள்ளன. அதேபோல, அமெரிக்கா 19-வது இடத்திலும் சீனா 93 ஆவது இடத்திலும் உள்ளன.
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிவாக வாழும் இடங்களைப்பொறுத்தவரையில், சுவிஸ் ஆறாவது இடத்திலும் கனடா ஒன்பதாவது இடத்திலும் பிரான்ஸ் 102 ஆவது இடத்திலும் லண்டன் 15 ஆவது இடத்திலும் ஜேர்மன் 17 ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தப்பட்டியலின் ஆகக்கடைசியில் 156 ஆவது நாடாக தென் சூடான் உள்ளது. சிரியா 149 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 154 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button