துறைமுகம் பகுதியில் முன்னறிவிப்பின்றி குடிசை வீடுகள் இடிப்பு…! நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் மஜக பொருளாளர்…!!

சென்னை., செப்.15.,சென்னை துறைமுகம் தொகுதி செவன் வெல்ஸ் பகுதியில் ஆசிர்வாதபுரம் என்ற குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் ஐம்பது குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அரசு அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்புமின்றியும், குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்காமலும் இடித்துத் தள்ளினார்கள் இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் நடுத்தெருவில் அனாதையாக நிற்கிறார்கள்.இதை அறிந்த #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவதாகவும், தேவை ஏற்பட்டால் மஜக சார்பாக போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.இதில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட பொருளாளர் அமிர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாஹிர், யூசுப், துறைமுக பகுதி செயலாளர் அபூபக்கர் , பகுதி துணைச் செயலாளர் அஸ்கர், வர்த்தக அணி செயலாளர் இஸ்மாயில், அம்ஜத், 55 வது வார்டு பொருளாளர் தாஹா , 56 வது வார்டு பொருளாளர் ரஹீம் , மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.தகவல்#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு15.09.2018