திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1080
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – கயமை
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
மு. வரதராசன் உரை : கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை : தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?
கலைஞர் உரை : ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Kayamai ( Baseness )
Tanglish :
Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu
Couplet :
For what is base man fit, if griefs assail?Himself to offer, there and then, for sale
Translation :
The base hasten to sell themselves From doom to flit and nothing else
Explanation :
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?