மகுடம் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு விழா-நிகழ்வு பற்றிய அறிவித்தல்

நிகழ்வு பற்றிய அறிவித்தல்

ட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் கலை இலக்கிய இதழின் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு பகிர்வு இலக்கிய அமைப்பினால் எதிர்வரும் சனிக்கிழமை (03-12-2016) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை உட்துறை முக வீதியில் அமைந்துள்ள TDDA மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது.

ஆய்வாளரும் பிரபல ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரபல நாவலாசிரியர் க.அருள் சுப்பிரமணியம் பிரதம அதிதியாகவும் பிரபல எழுத்தாளர் திரு. அ.ஜெயராஜா சிறப்பதிதி யாகவும் கலந்து கொள்கின்றனர்.

வரவேற்பை பகிர்வு செயற்பாட்டாளர் திரு. வ.தர்ம பாலனும் வெளியீட்டுரையினை மலை முரசு ஆசிரியர் மாயன் சிறி ஞானேஸ்வரனும் ” ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் மகுடம் ” என்ற தலைப்பில் ஆய்வுரையை கவிஞர் தில்லை நாதன் பவித்திரனும் நிகழ்த்தவுள்னர்.

மலரின் முதல் பிரதியை கனடா திரு.எஸ்.லிங்கேஸ்வரன் பெற்றுக்கொள்ள நன்றியுரையை மகுடம் ஆசிரியர் மகுடம் வி.மைக்கல் கொலின் ஆற்றுவார்.

திருமலை வாழ் கலை இலக்கிய நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

வி.மைக்கல் கொலின்

மகுடம் ஆசிரியர்

(Visited 91 times, 1 visits today)