டப்பா கூல்டிரிங்ஸ், கவர்ச்சி மொறுமொறு

குளிர் பானங்கள் எல்லாமே கெடுதல் என்று டாக்டர்கள் சொல்வது கிடையாது; எப்போதுமே “பிரஷ் ஜூஸ்’ நல்லது. சாத்துக்குடி, திராட்சை, ஆப்பிள் என்று பழங்களை பிழிந்து அப்போதே தயாரித்து தரும் ஆரோக்கியமான பானங்கள் நல்லது தான்.ஆனால், அதில் இல் லாத ஈர்ப்பு டப்பாக்களில் அடைக் கப்பட்ட குளிர்பானங்களில் இருக்கிறதோ தெரியவில்லை. உண்மையில், இதில் உள்ள “ப்ரக்டோஸ்’ என்ற ஒரு வகை இனிப்பு தான் கெடுதலான பொருள்.
ஒரு நாளைக்கு டப்பா குளிர் பானம், கவர்ச்சியான பிளாஸ்டிக்கில் அடைக் கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள் மூலம் 200 கிராம் “ப்ரக்டோஸ்’ உடலில் சேர்ந்தால் போதும், கண்டிப் பாக, ரத்த அழுத்தம் விர்ர்ர்…தான் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காதில் விழுந்ததா இளம் “எதிர்கால’ தூண்களே.

ஒல்லியா இருக்கான்; அள்ளறான் பாவி
கண்டபடி , கண்ட உணவுப்பொருட்களையும் , நொறுக்குத்தீனிகளையும் சாப்பிட தூண்டுவது எது? வாய்க்கு ருசியான, கண்ணை பறிக்கும் பாக்கெட்களில் உள்ள விதவித கொழுப்பு பொருட்கள் மட்டுமல்ல, நம்மை சுற்றியவர்களும் தான்.
ஆம், நுகர்வோர் உணவுப்பழக்க ஆய்வு ஒன்றில் வித்தியாசமான தகவல்கள் வெளியாகி உள்ளது. “நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்; ஆனால், கட்டுப்பாடு தேவை. உடலுக்கு ஊறு விளைவிப்பது என்றால், அதில் எச்சரிக்கையாக இருங்கள். ருசியாக இருக்கிறது என்பதால் எப்போதாவது சாப்பிடுவது சரி தான். ஆனால் அதையே அடிக்கடி சாப்பிடக்கூடாது; இப்படி சாப்பிட தூண்டுவது, நம்மை சுற்றியிருப்பவர்கள் தான்’ என்கிறது.
அத்துடன் நிற்கவில்லை, “ஒல்லியாக இருக்கும் இவன் இவ்வளவு சாப்பிடும் போது< நாம் சாப்பிடாமல் இருந்தால் எப்படி' என்று சிலர் சாப்பிடுகின்றனர். குண்டாவதற்கு இதுவும் ஒரு காரணம்' என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஓட்டலில் அடுத்தவரை பார்த்து சாப்பிடாதீங்க, சரியா?

இளம் வயது டும் டும் உடனே குவா குவா
உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் ஒன் றரை கோடி குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக் கின்றன; அவற் றில் போதிய சுகாதார வசதி இல்லாமல், முதல் மாதத்திலேயே 10 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன.
குறைப்பிரசவத்தில் முன்னணியில் இருப்பது ஆப்ரிக்க நாடுகள், வட அமெரிக்க நாடுகள். ஏழை நாடுகளான இங்கு, பல்வேறு சுகாதார குறைபாடுகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
பணக்கார நாடான அமெரிக்கா போன்ற நாடுகளிலும் குறைப்பிரசவங்கள், பாதிப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால், நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கருத்தரிப்பது, வயதான பின் குழந்தை பெறுவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. முதிர்ச்சியான உடல் அமைப்புடன் இல்லாமல் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேளாத, வாய் பேசாத ஊனம் உட்பட வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான். இளம் வயதில் டும்டும்…உடனே குவாகுவா; இப்படித்தான் நாம் பாரம்பரியமாக கடைபிடித்துவந்தோம். அதை விட்டதால்… கணக்குல சரியா

ஷுகரும் கன்ட் ரோல்
உங்களுக்கு ஷுகர் இருக்கிறதா? அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்களா? சரியாக உணவும், மருந்துகளும் சாப்பிட்டு வந்தாலே போதுமே. ஆனால், மற்ற நோய்களை விட, இதில் துல்லியமாக நேரப்படி எதையும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஷுகர் விர்ர்ர் தான்.
வெளிநாடுகளில், சர்க்கரை நோயாளிகளுக்கு சில கணித சோதனைகள் வைக்கின்றனர் டாக்டர்கள். அதை சரியாக கணக்கிட்டு விட்டால், அவர்களுக்கு ஷுகர் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொருள். இப்படி பல நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயை கட்டுப்பாட் டில் கொண்டு வந்துள்ளனர் டாக்டர்கள். இந்த முறை இப்போது இந்தியாவில் நுழைந்துள்ளது. இருந்தாலும், ஷுகர்ன்னு வந்திட்டதென்றால் நம்மவங்க உஷார் தானே.

ஆயுளில் பத்தாண்டு குறையுமாம்
புகைப் பிடிப்பது, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றும் அதிகமாக இருந்தால், ஆயுளில் பத்தாண்டு குறையுமாம். கண்டபடி "பேலன்ஸ்' செய்யத்தவறியவர்களுக்கு தான் இந்தநிலை.
உயரம், எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் இயக் கம் சீராக இருந்தாலும், கொலஸ் ட்ரால் இருந்தால் பாதிப்பு தான். கட்டுப்பாட்டில் வைத் திருந்தால் 90ஐ கூட எட்டலாம் என்பது தான் நிபுணர் கள் கருத்து. ஆனால், சிகரெட் பிடிப்பவர்கள் சிலர் "பேலன்ஸ்'ஆக இருந்து 90ஐ கடந்தவர்களும் உள்ளனர் என்பது மறுக்க முடியாது.