வயதோ 10 தோற்றமோ 70


மகனாக அப்பாவும், அப்பாவாக மகனும் நடிக்கும் அற்புதமான மருத்துவ விழிப்புணர்வு சினிமா படம் தான் “ப்பா!’ அமிதாப் பச்சன், சிறிய வயது பையனாக, அதே சமயம், வயதான தோற்றத்துடன் நடிக்கிறார்; அவரின் தந்தையாக மகன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
இப்படி பத்து வயது சிறுவன், எழுபது வயது கிழவனாக தோற்றமளிக்கும் நோய் தான் “ப்ரொகெரியா’ இது ஒரு மரபணு நோய்; லாமின் “ஏ’ என்ற ப்ரோட்டீனில் இருந்து உருவாகும் இந்த நோயில், சிறுவன் வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரிக்கும்; அதாவது, அந்த வேகத்தில் கிழத்தன்மை வரும். 12 வயதில் பார்த்தால், மண்டை பெரிதாகி, கிழடு அதிகமாக தட்டி, வழுக்கையும் விழுந்து விடும்.
உலகிலேயே 60 பேருக்கு தான் இந்த நோய் வந்துள்ளது. இந்தியாவில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து ஐந்து பேருக்கு ஏற்பட்டு, இரண்டு பேர் இறந்துவிட்டனர் என்ற தகவல் இருக்கிறது. இந்த அரிய நோய் வந்தவர்கள் 15 வயது வரை உயிருடன் இருப்பர்; அதிகபட்சம் முப்பது வயது வரை தான் வாழ முடியும்.
* இந்த நோய்க்கு “ஹட்சின்சன் கில்போர்டு சிண்ட்ரோம்’ என்றும் பெயர்.
* எடை குறையும்; ஒல்லியான தேகம் ஏற்படும்; வழுக்கை விழும் – இது தான் அறிகுறிகள்.
*தோல் மிக மெலிதாக இருக்கும். கண் புருவங்கள் குறைவாக இருக்கும்.
* பற்கள் வளரவே செய்யாது. பொக்கை வாயாக இருக்கும்.
* வயதான தோற்றம் இருந்தாலும், சிறுவனை போன்ற நினைப்பு தான் இருக்கும்; ஆனால், உடல் வளர்ச்சியின்மையால் மனப்போக்கு பாதிக்கப்படும்.
* இவர்களுக்கு இதய பாதிப்பு வெகு சுலபம்; அதனால், பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும்.
* இவர்களால் மற்ற சிறுவர்களை போல செயல்பட முடியாது; நினைப்பும் அப்படித்தான் இருக்கும்.
* சக வயதுள்ளவர்கள் போல விளையாடவோ, பள்ளிக்கு போகவோ தெரியாது; மந்தமாகவே இருப்பர்.
* அதிக கலோரி மிக்க உணவு வகைகள் தர வேண்டும்.
* இந்த நோய் தீர எந்த மருந்தும், அறுவை சிகிச்சையும் கிடையாது; ஆனால், சுரப்பி வழி சிகிச்சை தர முடியுமா என்று ஆய்வு நடக்கிறது.
* இந்த நோயை தவிர்க்க வழியில்லை. மரபணு காரணமாக ஏற்படுவதால், அதை தடுக்க முடியும் என்று நம்பிக்கையை நிபுணர்கள் விடவில்லை.
* என்ன காரணத்தால் இந்த நோய் வருகிறது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது; நிபுணர்களுக்கும் விடை கிடைக்கவில்லை.

யாரை பிடிக்கும் “அகோர போபியா?’
* “ஒழுங்கா சாப்பிடு; இல் லாட்டி பூச்சாண்டி வந்து ஒன்னைய விழுங்கிடுவான்…’
ண் ஒழுங்கா சொல்றத கேட்டு இருக்கணும்; இல்லே, உம்மாச்சி பார்த்துண்டே இருப்பார்; கண்ணை குத்திடுவார்…’
உங்கள் வாலுத்தனமான குட்டீசை இப்படியே மிரட்டி வைப்பவரா? முதல்ல அதை கைவிடுங்க. இப்படியே பயமுறுத்தியே வைத்துக்கொண்டிருந்தால், வயதான பின்னும் கூட அந்த பயம் அடிமனதில் பதிந்து விடும். பயம் என்பதற்கு பெயர் மருத்துவ அகராதியில் போபியா; சிறுவயது பயம் பதிந்த சிலருக்கு “அகோர போபியா’ பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அதென்ன “அகோர போபியா?’ கூட்டத்தை பார்த்தால் பயம்; சைக்கிள் ஓட்ட பயம்; காரில் பயணம் செய்ய பயம்; தனியாக வீட்டில் இருக்கவும் பயம். வரிசையில் சில நிமிடம் நின்றாலும் பயம்; தனியாக நின்றாலும் பயம்; மேடை போட்டு பேசுபவரை பார்த்தால் பயம்; தனியாக பஸ்,ரயில், விமானத்தில் சென்றாலும் பயம்; ஷாப்பிங் செய்யும் போதும் பயம்; இது தான் “அகோர போபியா.’
* இதற்கு வெளிப்படையாக தெரியும் அறிகுறிகள் பயம் தான். அதை நோயாளி தான் சொல்ல வேண்டும். அதை வைத்துத்தான் மனநோய் மருத்துவர் முடிவு செய்வார்.
* மன, உடல் நிலையில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
* பயரீதியான சம்பவங்களில் பாதிக்கப்பட்டிருந்ததால் தான் இப்படி நேரிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி நோய் வருவோர் வெறும் 10 சதவீதம் தான். எந்த பாதிப்பும் இல்லாமலேயே சிலருக்கு இந்த போபியா நோய் ஏற்படுகிறது.
* மனதில் தைரியத்தை வளர்த் துக் கொண்டால் போதும்; அதற்கு முறைப்படி தெரபி சிகிச்சை தருவார் டாக்டர்.
* இந்த நோய்க்கு இது தான் காரணம் என்று கூற முடியாது; சிறு வயதில் இருந்தே பயத்தை மனதில் ஆழமாக பதிந்து வைத்துக்கொண்டிருப்போருக்கு வர வாய்ப்பு அதிகம்.
* கடும் கட்டுப்பாடுகள் உள்ள குடும்பங்களில் உள்ளவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த பாதிப்பு வந்துள்ளது என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
* குழந்தைப்பருவத்தில் தேவை யற்ற கட்டுப்பாடு, கெடுபிடிகள் கூடாது; தைரியத்தை வளர்க்க ஓரளவு கட்டுப்பாடுடன் சுதந்திரமாக குழந்தைகளை விட வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் முழு சிகிச்சை பெற்று திரும்பும் வரை, தனியாக வெளியில் அனுப்பக்கூடாது.