`தேநீர்’… சில உண்மை!

`டீ’ எனப்படும் `தேநீர்’ நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக’ அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ’ தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே… சூடான லவங்கபட்டை டீ, பெண்களுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது. ஜலதோஷத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு `மசாலா டீ’யும், `சிலோன் டீ’யும் இதமளிக்கும்.

`கிரீன் டீ’யில் உள்ள `பாலிபினால்கள்’ அல்லது `பிளேவனாய்டுகள்’ ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்’ உதவுகின்றன. ` முலிகை டீ’யில் `டேனின்’ இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது முலிகை டீ அருந்த லாம். முலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி. `இஞ்சி டீ’ கொஞ்சம் காரசாரமாக இருந்தாலும், இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாக புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாக பெண்களுக்கு. `அஸ்வகந்தா டீ’ மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். டீயுடன் `ஸ்வீட் ருட்’ அல்லது `லீகோரைஸை’ சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டை புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும். ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்கு புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.

ஒரு மறுமொழி