காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

நோன்பு மனிதனை பாதுகாக்கும் கேடயம்.

அபூ முஆத்

இன்று எமது நடைமுறை திசை திருப்பப்படுகின்றது. கேடயம் உடைக்கப்படுகின்றது. பிறையை ஏற்பதில் தொடங்குகின்ற கருத்து முரண்பாடு தொழுகையிலும் வேறு பல இபாதத்களிலும் தொடர ஆரம்பிக்கின்றது. ஏனைய மாதங்களை விட அதிகமாகவும், சுவையாகவும் உண்டு மகிழ்கிறோம். பகலைத் தூங்கியும் இரவை விழித்தும் வீணாக்குகிறோம். ஷைத்தானுக்கு விலங்கிடப்படும் மாதத்தில் நாமே ஷைத்தான்களாக நடிக்கிறோம். வானொலியும் ஓலமிடுகின்றது. ஓதுவதும், தொழுவதும், துஆக் கேட்பதும், தௌபாச் செய்வதும் வானொலிதான். நாமோ செவிடர்களாக சமைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டும் நேரத்தைக் கடத்துகின்றோம். வானொலி இன்றேல் நோன்பு இல்லை எனுமளவுக்கு வானொலி நோன்போடு கலந்து விட்டது; சுயமாக இபாதத் செய்வதற்குத் தடையாக அமைந்து விட்டது. ஸகாத் ரமழானில் செய்ய வேண்டிய ஓர் இபாதத் அல்ல. ஆனால், அவ்வாறான ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்தி பிச்சைக்கார மாதமாக அதனை கண்ணியமிழக்கச் செய்து விட்டோம்.

நோன்பு ஒரு கேடயம் என்பது ஹதீஸாகும். கேடயம் என்பது எதிரிகள் விடுக்கின்ற அம்புகளை, ஈட்டிகளை, வாள் வீச்சுக்களை, கற்களை தடுக் கின்ற அன்றைய பாதுகாப்புக் கலமாகும். எதிரி களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அன்று பயன்படுத்தப்பட் ஒரு படைக்கலனை ரஸூல் (ஸல்) அவர்கள் நோன்புக்கு உவமித்துக் காட்டி யுள்ளார்கள். இதன் உண்மை இன்றும் தெளி வாகவே விளங்குகின்றது.

வாழ்க்கை என்பது போராட்டமாகும். அது உலக விவகாரங்களில் எதிர்கொள்கின்ற அரசியல், பொரு ளாதார, சமூக, பண்பாட்டுச் சவால்களாக இருக்க லாம். அல்லது ஆன்மீக, மானசீக சவால்களாக எதிர்கொள்கின்ற போராட்டமாகவும் இருக்கலாம். நவீன உலகும், அதன் நடைமுறைகளும் ஒவ் வொரு மனிதனையும் உலகம் என்ற போர்க்களத்தில் ஒரு சிப்பாயாகவே நிறுத்தி வைத்திருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தனது எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள் வதற்காக கேடயங்களை சுமந்து கொள்ள வேண் டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு நபர்களை எதிரியாகக் கருதலாம். ஒவ்வொருவரதும் சமூகப் படித்தரத்துக்கேற்ப எதிரிகளின் பார்வை, தாக்கம் வேறுபட்டதாக அமையலாம். ஆனால் இஸ்லாம் எல்லோருக்குமான பொது எதிரிகள் மூவரை இனம் காட்டித் தருகின்றது. நப்ஸ் என்னும் உள்ளம் எமக்குள்ளே நின்று எமக்கெதிராக சூழ்ச்சி செய் கின்றது. ஷைத்தான், எமது புலன்களுக்கு உட்படா மல் மறைந்து நின்று எம்மைக் கெடுக்க சதி செய்கின் றான். உலகம், அதன் இன்பங்கள், மாயைகள், எமது புலன்களை மயக்கி எமக்கெதிராக செயல்படுகின் றது. இந்நிலையில் எம்மோடிணைந்து, எம்மோடு உறவாடி, எம்மை அறியாமல் எமக்கெதிராக செயல்படும் இவ்வெதிரிகளை இனம்காண்பதும் எதிர்கொள்வதும் அவசியமானவை.

அல்குர்ஆனும், ஸுன்னாவும் இவ்வெதிரி களைப் பற்றி எச்சரிக்கின்ற போதனைகளைச் சுருக்கமாக அவதானித்த பின்னர், கேடயத்தைப் பயன்படுத்துவது பற்றிக் கருத்துப் பரிமாறுவோம்.

“ஆத்மாவின் மீதும், அதனை உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கு அறிவித்தவன் மீதும் சத்தியமாக எவன் பாவங்களை விட்டும் தனது உள்ளத்தைப் பரி சுத்தப்படுத்திக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றிய டைந்து விட்டான். எவன் அதனை (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன் நிச்சயமாக நட்டமடைந்து விட்டான்” (91:710) என்று அல்குர்ஆன் நப்ஸ் பற்றி அறிவுறுத்துகின்றது. “மனிதனில் ஒரு தசைத் துண்டு உண்டு. அது சீர்திருந்தினால் மனி தன் சீர்திருந்துவான். அது சீர் கெட்டால் மனிதன் சீர்கெட்டு விடுவான். அதுதான் உள்ளம்” (புஹாரி) என்று ரஸூல் (ஸல்) அவர்கள் அதனை எடுத்துக் காட்டுகின்றார்கள். 

ஷைத்தானைப் பற்றி எச்சரிக் கின்ற அல்குர்ஆன், “ஆதமு டைய மக்களே! நீங்கள் ஷைத் தானை வணங்காதீர்கள். நிச்சய மாக அவன் உங்களுக்குப் பகி ரங்க எதிரி ஆவான்” (36:60) என்றும்; “ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்களை சோதனைக் குள்ளாக்க வேண்டாம். அவனும் அவனுடைய கூட்டத்தினரும் நீங்கள் கண்டுகொள்ள முடியாத விதத்தில் உங்களை வழிகெடுக்க காத்திருக்கிறார்கள்” (7:27) என் றும்; “நீ என்னை வழிகெட்டவ னாகஆக்கியதால் (ஆதமுடைய மக்களை) உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடுப்பதற் காக அவ்வழியில்) நான் உட் கார்ந்து கொள்வேன்… அவர் களுக்கு முன்னாலும், பின்னா லும், வலமாகவும், இடமாகவும் நின்று வழிகெடுப்பேன்” (7:1617) என்று ஷைத்தான் சூளுரைத் துள்ளதாகவும் சொல்லிக் காட்டு கின்றது.

உலக மாயை பற்றிக் கூற வந்த அல்குர்ஆன், “இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்” (35:5) என்று எச்சரிக்கின்றது. “நிச்சயமாக உலகம் இனிமையானதும் பசு மையானதுமாகும். அல்லாஹ் உங்களை அதன் பிரதிநிதியாக்கி நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர் கள் என்று கவனிக்கின்றான். எனவே உலகத்தைப் பயந்து கொள்ளுங்கள்” (முஸ்லிம்) என்று ரஸூல் (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். “ஒருவர், அல்லாஹ்வும் மக்களும் நேசிக் கின்ற ஒரு செயற்பாட்டை சொல்லித் தருமாறு ரஸூல் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது உலகில் பற்றற்றவனாக இருந்து கொள்; அல்லாஹ் உன்னை விரும்புவான். மக்களி டம் இருப்பதில் தேவையற்ற வனாக இரு; மக்கள் உன்னை விரும்புவார்கள் என்று பதிலளித் தார்கள்” (இப்னு மாஜா). “ஒவ் வொரு சமுதாயத்துக்கும் ஒரு சோதனை உண்டு. எமது சமுதா யத்துக்கு செல்வமே சோதனை” (திர்மிதி) என்பனவும் உலக மாயை பற்றிய ரஸூல் (ஸல்) அவர்களின் அறிவுரையாகும்.

நோன்பு என்பது, பகல் நேரத் தில் பசித்திருப்பதும், தாகித்தி ருப்பதும், பாலியல் தொடர்பு களிலிருந்து விலகியிருப்பது மென பொதுவாகக் கருதப்படு கின்றது. நோன்பின் நோக்கம் அது மட்டுமல்ல என்பதை பல ஹதீஸ்கள் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றன. “நீங்கள் முத்தகீன் களாக மாற வேண்டுமென்பதற் காக” என்று (2:183) அல்குர்ஆன் சுருக்கமாக இதனைச் சுட்டிக் காட்டுகின்றது. எனவே இஸ் லாம் நோன்பின் மூலம் மனித னைப் பக்குவப்படுத்த விரும்பு கின்றது என்பதை இவற்றின் மூலம் விளங்குகின்றோம். மனி தன் உண்பதும், குடிப்பதும், பாலியலுணர்வை ஹலாலான முறையில் தீர்த்துக் கொள்வதும் அவனது உடலியல் தேவை சார்ந்த செயற்பாடுகளாகும்.

மனிதன் எலும்பு, தசை, குருதி என்பவற்றாலான உடலை மட் டும் கொண்டவனல்லன். அவ னுக்கு அறிவும், ஆன்மாவும் உண்டு. உடலைவிட ஆன்மா உயர்வானது; அது ஏனைய படைப் புக்களிலிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டுகின்றது. நாம் வருடத்தில் பதினொரு மாதங்கள் உடலியல் தேவைக்கு அழுத்தம் கொடுக்கின்றோம். ஆன் மீகத் தேவைக்கு மிகக் குறைந்த நேரத்தையே ஒதுக்குகின்றோம். இதனால் ஆன்மாவுக்கும், உட லுக்குமிடையில் சமநிலை பேணப்படுவதில்லை. எனவே தான் மனிதனை அதிலிருந்து விடுவிப்பதற்காக சமநிலையை நிலைநிறுத்துவதற்காக பன்னி ரண்டாவது மாதம் ஆன்மாவுக் குரிய மாதமாக ஆன்மாவைப் போசிக்கும் மாதமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

மனித ஆன்மா பலவீனப்படும் போது உடலியல் தேவைகள் மிகைத்து விடுகின்றன. மனிதன் மிருக நிலைக்குத் தாழ்ந்து விடு கின்றான். பிறரின் உரிமைகளை அவர்களின் அனுமதியின்றி அனு பவிக்கின்றான். அல்லது பறித் துக் கொள்கின்றான். இதன் விளைவாகவே உலகம் சீர்குலை கின்றது. இந்த மோசமான நிலை யிலிருந்து மனிதனைக் காக்கின்ற ஒரு வழிமுறைதான் நோன்பு. இத னைத்தான் ரஸூல் (ஸல்) அவர் கள் கேடயம் என உவமித் தார்கள்.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர் கள் கூறுன்கிறார்கள்: “உணவைக் குறைத்துக் கொள்வதும், தூக் கத்தை சுருக்கிக் கொள்வதும் உரையாடலை மட்டுப்படுத்திக் கொள்வதும் மக்களால் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொள்வ தும் மிக அவசியமானவை. உண வைக் குறைத்துக் கொள்வதால் காமத்தின் வேகம் முறியடிக்கப் படுகின்றது. தூக்கத்தை சுருக்கிக் கொள்வதால் தெளிவான எண் ணங்கள் உற்பத்தியாகின்றன. உரையாடலை மட்டுப்படுத்திக் கொள்வதால் பல துன்பங்களிலி ருந்து விடுதலை கிடைக்கின்றது. துன்பங்களை சகித்துக் கொள்வ தால் படித்தரம் உயர்கின்றது.” இவை நோன்பு காலத்தில் இடம் பெறுவதால் அவனது ஆன்மா பக்குவமடைகின்றது.

நோன்பு காலம் வந்ததும் மனிதன் தனது ஆன்மாவைப் போசிக்கத் தயாராகின்றான். நோன் பின் மூலம் அல்லாஹ் கண் காணிக்கின்றான் என்ற இஹ்ஸா னிய பண்பு வளர்ச்சியடைகின் றது. பாவங்களிலிருந்து விலகிக் கொள்கின்றான். உடலிச்சைக ளைக் கட்டுப்படுத்திக் கொள் கின்றான். தன்னடக்கத்தை சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கின்றான். அல்லாஹ்வை அஞ்சுகின்றான். தனது அடிமைத் துவத்தை வெளிக்காட்டுகின்றான். பாவமன்னிப்புக் கேட்கின்றான். அல்லாஹ்வின் அருளை ஆசிக் கின்றான். நீண்ட நேர தொழுகை யிலும், திக்ர்களிலும் ஈடுபடுகின் றான். அல்குர்ஆன் ஓதுகின்றான். அதனை விளங்க முயற்சிக்கின் றான். பிரார்த்தனையில் மூழ்கு கின்றான். அல்லாஹ்வுக்கும் தனக்குமிடையிலான தொடர்பை இறுக்கிக் கொள்கிறான். சகோதர முஸ்லிமைக் கண்ணியப்படுத்து கின்றான். மற்றவர்களுக்கு உத வும் பண்பை கடமையாக்கிக் கொள்கின்றான். இவ்வாறாக இரவிலும் பகலிலுமான பயிற்சி கள் ஆன்மாவுக்குத் தீனிபோடு கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று எதிரிகளிடமிருந்தும் அவனைப் பாதுகாக்கின்றன.

ஆனால் இன்று எமது நடை முறை திசை திருப்பப்படுகின் றது. கேடயம் உடைக்கப்படு கின்றது. பிறையை ஏற்பதில் தொடங்குகின்ற கருத்து முரண் பாடு தொழுகையிலும் வேறு பல இபாதத்களிலும் தொடர ஆரம் பிக்கின்றது. ஏனைய மாதங்களை விட அதிகமாகவும், சுவையாக வும் உண்டு மகிழ்கிறோம். பக லைத் தூங்கியும் இரவை விழித் தும் வீணாக்குகின்றோம். ஷைத் தானுக்கு விலங்கிடப்படும் மாதத்தில் நாமே ஷைத்தான் களாக நடிக்கின்றோம். எமது விழிப்பு எமக்கு மட்டுமல்ல, பிற சமூக மக்களுக்கும், முதியோருக் கும், நோயாளருக்கும், குழந்தை களுக்கும் தொல்லையாக அமை கின்றது. போதாக்குறைக்கு வானொலியும் ஓலமிடுகின்றது. ஓதுவதும், தொழுவதும், துஆக் கேட்பதும், தௌபாச் செய்வதும் வானொலிதான். நாமோ செவி டர்களாக சமைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் அரட் டையடித்துக் கொண்டு நேரத் தைக் கடத்துகின்றோம். வானொலி இன்றேல் நோன்பு இல்லை எனுமளவுக்கு வானொலி நோன்போடு கலந்து விட்டது; சுயமாக இபாதத் செய் வதற்குத் தடையாக அமைந்து விட்டது. ஸகாத் ரமழானில் செய்ய வேண் டிய ஓர் இபாதத் அல்ல. ஆனால், அவ்வாறான ஒரு சம்பிரதா யத்தை ஏற்படுத்தி பிச்சைக்கார மாதமாக அதனை கண்ணியமி ழக்கச் செய்து விட்டோம். இவை யனைத்தும் ஏற்கனவே சுட்டிக் காட்டிய எதிரிகளிலிருந்து விடுக் கப்படுகின்ற அம்புகள்தாம்.

ஆகவே, இச்சவால்களை முறியடிக்கும் கேடயமாக நோன் பைப் பயன்படுத்துவதில் எம்மை மீள்பரிசீலனை செய்வோமாக. நப்ஸும், ஷைத்தானும், உலக மாயையும் எம்மை ஆட்டிப் படைக்காமல் அவற்றைக் கட் டுப்படுத்தும் பயிற்சியாக தர்பிய் யத்தாக நோன்பு காலத்தைப் பயன்படுத்துவோமாக. வந்து போகும் ரமழான் எம்மை ஆசிர் வதிக்குமாக, நாம் செய்யும் நற் காரியங்களை கையேற்றுச் செல் லுமாக. ரமழான் விருந்தாளியை வெறுங்கையோடு அனுப்பா மல் வெறுப்போடு பயணிக்கா மல் விருப்போடு பிரியாவிடை கூற அன்பளிப்புக்களை சேகரித் துக் கொள்வோமாக. அல்லாஹ் அதற்காக அருள்பாலிப்பானாக.

_______________________________________________________________________________________________ Share/Save/Bookmark

Filed under: தஃவா களம்

பின்னூட்டமொன்றை இடுக

ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,286 வருகைகள்
free counters