காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

காத்தான்குடியில் இளைஞர் மர்ம மரணம்!

காத்தான்குடி கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை உரிமையாளரான கொழும்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

புதிய காத்தான்குடி தக்வா பள்ளிவாயல் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த இவர் குறித்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியாழக் கிழமை இரவு தூங்கிய இவர் மறுநாள் வெள்ளிக் கிழமை மாலை வரையும் வெளியில் வராததை அறிந்த இவரது நண்பர்களும் அயலவர்களும் வீட்டினுள் சென்று பார்த்த போதே அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

 

 

பின்னர் இது குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Filed under: காத்தான்குடி செய்திகள்

பின்னூட்டமொன்றை இடுக

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,260 வருகைகள்
free counters