காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

மழைக் காலத் தொழுகையும், மார்க்கத்தின் சலுகையும்

மழைக் காலெமென்பது இந் நாட்களில் பலருக்குச்  சோதனையாக உருவாகி இருக்கிறது. தமது அன்றாடத் தேவைகளுகுக் கூட வெளியில் செல்வெதென்பது மழையால் சிரமமானதாகவுள்ள அதேவேளை மழை விட்டால் வீதி வெள்ளம், சேறு, சுரி என சிரமத்தை ஏற்படுத்துகின்றது. எனவேதான் தூய இஸ்லாம் மழைக்காலத் தொழுகை தொடர்பில் இரு விதமான சலுகைகளைத் தருகின்றது.

1‍) வீட்டிலேயே தொழுது கொள்வது

2) சேர்த்துத் தொழுது கொள்வது

வீட்டில் தொழுவது பற்றிய சட்டங்கள்

இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள் என்பதை பாங்கில் (அதான்) எந்த இடத்தில் இணைத்துக் கொள்வது?

“தொழுகைக்கு வெற்றியின் பால் விரைந்து வாருங்கள்” என்ற வாசகங்களின் பின் இணைத்துக் கொள்ள வேணுமென சில அறிஞர்கள் கூறுகின்ரனர். அவ்வாறு கூருவோர் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் ஒரு மழை நாளில் தனது முஅத்தினை நோக்கி  “நீ ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்று கூறினால் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று கூராமல் இருப்பிடங்களில் துழுது கொள்ளுங்கள் என்று கூறு, என்று சொன்னார்கள். மக்கள் அதை ஆச்சரியத்தோடு நோக்குவது போலக் காணப்பட்ட போது என்னை மிக உயர்ந்த (அழ்ழாஹ்வின் தூதரே) இதைச் செய்தார்கள் என பதில் அளித்தார்கள்.” (நூல்: புஹாரி , முஸ்லிம்)

மற்றும் சில அறிஞர்கள் பாங்கின் வழமையான ஒழுங்கு அப்படியே இருக்க முடிவில் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள் என்று கூற வேண்டும் என்று கூருகின்றனர். அவ்வாறு கூருவோர் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

“இப்னு உமர் (ரழி) அவர்கள் குளிர், காற்று, மழை உள்ள ஓர் இரவில் பாங்கு சொல்லிவிட்டு இறுதியில் (மக்களே) நீங்கள் உங்கள் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, நபியவர்கள் பயனத்தில் வைத்து  குளிர், மழை உள்ள ஓர் இரவில் இவ்வாறு கூறுமாறு தனது முஅத்தினை ஏவினார்கள்.” (நூல்: புஹாரி , முஸ்லிம்)

இது விடயத்தில் இஸ்லாமிய உலகில் அன்று முதல் இன்று வரை தாராளமான கருத்து வேறு பாடுகள் நிலவிய போதிலும் வெவேறு சந்தர்ப்பங்களிலும் இரு மாதிரியாகவும் செய்து கொள்ள முடியும் என்ற கருத்தை ஆய்வின் அடிப்படையில் சரி காண முடிகிறது.

ஆனால், எமது பகுதிகளில் இந்த நபி வழி  பலருக்கு அறிமுகமற்றதொன்றாகவே காணப் படுகிறது. மிக அரிதாகவே தவிர பல பள்ளிவாயல் பாங்குகளின் போது இவ் வாசகம்  சேர்த்துக் கொள்ளப் படவேஇல்லை. பயனத்தில் சேர்த்தல், சுருக்குதல் மற்றும் பயனி, நோயாளி ரமழான் நோன்பை வேறு தினங்களில் நோற்றல் போன்ற சலுகைகளை விழங்கியிருப்போர் இச் சலுகையைப் புரிந்து நடை முறைப்படுத்த முன்வரவேண்டும். குறிப்பாக சில பகுதிகளில் தன்னீரில் பாம்புகள் காணப்படுவது உறுதியான பின்பும் இம் மாதிரியான சலுகைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.

சேர்த்துத் தொழுது பற்றிய சட்டங்கள்

சேர்த்துத் தொழுதல் என்பது அடிப்படையில் சுருக்குதல் எனும் சட்டத்தோடு இணைத்து பயனத்திற்காக மார்க்கம் வழங்கியதாகும், ஆனால், பயனம் அல்லாமலும்  நபியவர்கள் சேர்த்துத் தொழுதுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நபியவர்கள் மதீனாவில் எவ்வித மழையோ, அச்சமோ இன்றி ழுஹர் அஸர் ஆகியவற்றைச் சேர்த்துத் தொழுதார்கள். இச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒர்வரான அபுஸ் ஸுபைர் கூறுகிறார். நான் (மற்றொரு) அறிவிப்பாளரான ஸஈத் பின் ஜுபைரிடம் நபியவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நானும் இதையேதான் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் நபியவர்கள் தனது உம்மதிலிருந்து எவரையும் சிரமப் படுத்தாமலிருக்க விரும்பினார்கள் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

அல்குர்ஆனில் 22:78, 05:06 போன்ற வசனங்களில் “மார்க்கத்தில் அழ்ழாஹ் சிரமத்தை ஏறப்டுத்தவில்லை” என்பதை தெளிவாகவே கற்றுத் தருகிறான். 02:185ல் “அழ்ழாஹ் உங்களைக் கஷ்டப் படுத்த விரும்ப வில்லை” என்று கூறுகின்றான்.

-தாருல் அதர்-

Filed under: தஃவா களம்

பின்னூட்டமொன்றை இடுக

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,286 வருகைகள்
free counters