மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்: மதுரை மேற்கு – உ.வாசுகி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்:

  1. பெரம்பூர் – அ. சவுந்தரராசன் பி.ஏ.,
  2. சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன் பி.ஏ.,
  3. மதுரை மேற்கு – உ.வாசுகி பி.காம்.,
  4. திருப்பூர் தெற்கு – கே. தங்கவேல்
  5. பெரியகுளம் (தனி) – ஏ. லாசர்
  6. மதுரவாயல் – க. பீம்ராவ்
  7. திரு.வி.க. நகர் (தனி) – பி. சுகந்தி எம்.ஏ., பி.எட்.,
  8. கவுண்டம்பாளையம் – வி. ராமமூர்த்தி பி.ஏ.,
  9. திண்டுக்கல் – என். பாண்டி
  10. நெய்வேலி – டி. ஆறுமுகம்
  11. கந்தர்வக்கோட்டை (தனி) – எம். சின்னதுரை
  12. எடப்பாடி – பி. தங்கவேல்
  13. விக்கிரவாண்டி – ஆர். ராமமூர்த்தி பி.ஏ. பி.எல்.,
  14. கோபிசெட்டிபாளையம் – ஏ.எம். முனுசாமி
  15. கூடலூர் (தனி) – பி. தமிழ்மணி
  16. பழனி – வ. ராஜமாணிக்கம் பி.ஏ. பி.எல்.,
  17. லால்குடி – எம். ஜெயசீலன் எம்.ஏ.,
  18. கீழ்வேளூர் (தனி) – வி.பி. நாகை மாலி பி.ஏ., பி.எட்.,
  19. நன்னிலம் – ஜி. சுந்தரமூர்த்தி
  20. ராஜபாளையம் – ஏ. குருசாமி
  21. திருவையாறு – வெ. ஜீவகுமார் பி.எஸ்.சி., பி.எல்.,
  22. அம்பாசமுத்திரம் – பி. கற்பகம் (பெண்)
  23. போளூர் – பி. செல்வன்
  24. கோவை தெற்கு – சி. பத்மநாபன்
  25. விளவங்கோடு – ஆர். செல்லசுவாமி

இந்த பட்டியலில் 3 பெண்கள், மதுரவாயல், நெய்வேலி, இலால்குடி, போளூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் போட்டியிடும் சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

  1. திருபுவனை (தனி) – எல். கலிவரதன்
  2. டி.ஆர். பட்டிணம் – முகமது தமீம் அன்சாரி
  3. லாஸ்பேட்டை – ஏ. ஆனந்த்
  4. பாகூர் – பி. சிவகாமி