இரண்டே நாட்களில் “எலக்கியவாதி” ஆவது எப்படி ?

1. நேரா புத்தக கண்காட்சிக்கு போய், அஞ்சாறு எலக்கிய ஆளுமைகள புடிச்சி, கன்னத்தோடு கன்னம் ஒட்டி போட்டோ எடுத்துருங்க. “ஏய்… யாருய்யா நீ?” அப்டீன்னு கேட்டா… நாந்தான் அனலினியன், புனல்தலையன் அப்டி இப்டீன்னு எதுனா சொல்லி சமாளிங்க…! ‘பயபுள்ள, இவனும் எலக்கியவாதிதான் போல’ன்னு நம்பிருவாங்க.

2. எல்லா ஸ்டால்லயும் போய் சிரிச்சி சிரிச்சி பேசுங்க. பட் எலக்கியவாதிங்க சிரிக்க மாட்டாங்க… முறைப்பாங்க… ஆனாலும் நீங்க சிரிக்கணும்…!

3. வீட்டுக்கு வந்த உடனே, ஃபேஸ்புக்குல உள்ள சொடலமுத்துங்கற ஒங்க பேர, சொடலமுத்திரன் அப்டீன்னு மாத்திருங்க…

4. “அவன் எழுதிய புத்தகத்தை நான் குப்பையில் கிடாசுகிறேன், இவன் எழுதிய புத்தகத்தை நான் ராக்கெட் செய்து விடுகிறேன், இது கல்யோவ்ஸ்கி எழுதிய பிரெஞ்சு நாவலின் தழுவல், அவனையெல்லாம் ஏரித்தண்ணில முழுக வெச்சி அடிச்சாலும் அவனுக்கெல்லாம் எலக்கியம் வராது” என்றெல்லாம் பதிவ போட்டுத்தள்ளுங்க…

5. “தமிழ்” என்பதை “தமில்” என்றெழுதி, அந்த தவறை சுட்டிக்காட்டுபவனிடம், குமரிக்கண்டத்தில் தமில் என்றுதான் இருந்தது, ஹீத்ரு மொழியில் இருந்து வந்ததுதான் “ழ” எனும் எழுத்து, என்று அவன் குரல்வளையை கடித்துத் துப்புங்கள்…

இரண்டாம் நாள் மாலை ஆறு மணிக்கு “எலக்கியவாதி” ரெடி…!

(Shared by VETRIVEL)