தேர்தல் முடிவு: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் அணி கைப்பற்றியது!

திரைப்பட த்யாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத்தின் 2017 – 2019ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 27 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடந்த இந்த தேர்தலில், விஷால் அணி, தாணுவின் ஆதரவு பெற்ற ராதாகிருஷ்ணன் அணி, கேயார் அணி ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன.

காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் உள்ள 1211 வாக்காளர்களில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 1059 பேர் வாக்களித்தார்கள்.

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னணி வகித்து வந்த விஷால், 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஷால் 476 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 333 வாக்குகளும், கேயார் 223 வாக்குகளும் பெற்றுள்ளனர். விஷால் ஏற்கெனவே ந்டிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கே.இ.ஞானவேல்ராஜாவும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபுவும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கேயார் அணி சார்பில் போட்டியிட்ட கதிரேசன் இன்னொரு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஷால் அணியைச் சேர்ந்த பெரும்பாலோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 21 செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வருமாறு:

0